தயார் நிலையில் மாற்று அணி, ஐனவரிக்கு முன்னர் அறிவிக்கப்படும் - சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவிப்பு
மாற்று அணி யின் தேவை ஏற்பட்டிருப்பருப்பதால் அந்த அணியை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கமைய அடுத்து வரும் ஐனவரி மாதத்திற்கு மன்னதாக மாற்று அணி நிச்சயம் உருவாக்கப்படுமென தான் நம்புவதாக ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாற்று அணி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்...
மாகாண சபைகள் கலைக்கப்பட்டதன் பிற்பாடு தன்கென்று ஒரு கட்சியை விக்கினேஸ்வரன் ஆரம்பித்திருந்தார். அந்தக் கட்சி சார்பாக வடக்கிலும் கிழக்கிலும் அதற்கான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டார். அதற்கான மாவட்டக் குழுக்களையும் அமைத்துக் கொண்டுள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியாக நாங்கள் நீண்ட காலமாக ஏறத்தாழ ஆயுதப் போராட்டம் மிக நீண்ட காலமாக ஐனநயாக ரியதிhன தேர்தல் அரசியலில் நாற்பது வருட கால அரசியல் அனுபவத்தைப் பெற்ற ஒரு அடிப்படையில் வடகிழக்கு மாகாண சபையை நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் இவ்வாறு பல்வேறுபட்ட அனுபவங்களைக் கொண்ட அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் இருக்கிறது.
ஆகவே நாங்கள் நீங்ட காலம் விக்கினேஸ்வரனுடன் பேசி வருகின்றோம்.
ஆக ஒரு மாற்று அணியின் தேவை என்பது இப்போதல்ல மிக நிண்டகாலத்திற்கு முன்னர பேசப்பட்டது. அதற்குரிய காரணம் கூட்டமைபு சரியான பாதையில் சரியான முறையில் செயற்படவில்லை என்ற அடிப்படையில் அந்த மாற்று அணி பற்றிப் பேசப்பட்டது.
ஆகவே நாங்கள் பல விசயங்களைப் பேசி முடித்திருக்கிறோம். இப்பொழுது ரெலோவில் இருந்து ஒரு பகுதியினர் பிரிந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் கூட தாம் விக்கினேஸ்வரனுடன் இணைந்த செயற்படப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அதே போல ஏனைய சிறு குழக்களாக இருக்கக் கூடியவர்களும் எங்களுடன் இணைந்து போவதற்குத் தயாரா இருக்கின்றார்கள்.
ஆகையினால் நான் நம:புகின்றேன் அந்த மாற்று அணி என்பது இந்த மாதத்திற்கு அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் அந்த மாற்று அணி என்பது அமைக்கப்படுமென்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் ஒரு மாற்று அணி மாற்றுத் தலைமையாகச் செயற்படுவார்கள்.
நாங்கள் மாற்று அணியைத் தோற்றுவிப்பதற்கான அடிப்படை வேலைகள் பல செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக அதற்கான யாப்பு, புரிந்துணர:வு ஒப்பந்தம் என மாறி மாறி செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு அந்த விசயங்கள் நடந்த கொண்டிருக்கின்றன. அது தவிர ஒரு தேர்தலை நோக்கி நகர:வுகளும் முன்னெடுக்கப்பட்டக் கொண்டு தான் இருக்கின்றன.
எமது கட்சி உறுப்பினர்களூடாக முதற்கட்டகடமாகச் செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் செய்து கொண்ட தான் வருகின்றொம். நான் ஏற்கனவே கூறியது போன்று இந்த இடைப்பட்ட இந்த மூன்று மாதகாலத்திற்குள் மாற்றங்கள் ஏற்படப் போவது கிடையாது.
ஆக இந்தக் காலத்தில் என்னத்தைத் தான் பேசினாலும் தேர்தலை நோக்கம் கொண்டதாகவே அனைத்து தரப்பினர்களதும் செயற்பாடுகளும் இருக்கும். அந்த அடிப்படையில் தேர்தலுக்கு முகங் கொடக்கக் கூடியவகையில் எங்களது செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கிறோம்.
இதில் முன்னெடுப்பதற்கான முழுமையான விசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதனை மிக விரைவாக செயற்படுத்த வேண்டுமென்று நாங்கள் அதனை ஊக்குவித்தாலும் கூட பல்வேறுபட்ட தரப்புகளில் இருந்து வரக்கூடிய சில சில நெருக்கடிகள் இருக்கலாம்.
அவ்வாறான நெருக்கடிகள் இது சிலவேளை பின்தள்ளப்பட்டக் கொண்டு செல்லக்கூடிய காரணமாக இருக்கலாம். ஆனாலும் இந்த டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஐனவரி மாத ஆரம்பத்திற்குள் ஒரு மாற்று அணியென்பது நிச்சயமாக மக்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்தப்படுமென்றே நான் நம:புகின்றென்.
Post a Comment