மாகாண சபையை கூட முடக்கியது ஐ.தே.கட்சி, புதிய அரசு மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் என தவராசா தெரிவிப்பு - Yarl Voice மாகாண சபையை கூட முடக்கியது ஐ.தே.கட்சி, புதிய அரசு மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் என தவராசா தெரிவிப்பு - Yarl Voice

மாகாண சபையை கூட முடக்கியது ஐ.தே.கட்சி, புதிய அரசு மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் என தவராசா தெரிவிப்பு


மாகாண சபையை கூட முடங்க வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியே எனத் குற்றஞ்சாட்டியுள்ள  ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா புதிய அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தி மாகாண சபையை இயங்க வைக்குமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்..

மாகாண சபத் தேர்தல் உடனடியாக நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடக்குமென்றே நம்புகின்றேன். இதனை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் மகிந்த ராஐபக்ச சொல்லியிருக்கின்றார்.

உண்iயில் அதிகாரப் பகிர்வு கூடிய அதிகாரங்கள் எல்லாம் வேண்டுமென்று பெரிய கோசங்களை விட்டுக் கொண்டும் உணர்வுபூர்வமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இருக்கிற மாகாண சபையைக் கூட முடங்க வைத்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசு தான். அது எத்தனை பேருக்குத் தெரியுமென்று எனக்குத் தெரியவில்லை.

சாதாரண மாகாண சபை தேர்தல்ச் சட்ட மூலங்களுக்கு அமைவாக மாகாண சபைகளினுடைய காலம் முடிவடைந்து இரண்டு கிழமைக்குள் தேர்தல் வைக்கக் கூடிய ஒழுங்குகளைச் செய்வதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் இருக்கிறது. இது தான் மாகாண சபைத் தேர்தல்ச் சட்டம்.

ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் என்ன செய்தது என்றால் 2017 ஆம் ஆண்டு ஒரு சட்ட மூலத்தைக் கொண்டு வந்தார்கள். மகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றுவதாகக் கூறி அந்தச் சட்ட மூலத்தைக் கொண்டு வந்தார்கள். அதன்பின் குழு அமைப்பப்ட்டு அந்தக் குழவின் அறிக்கையை பாராளுமன்றம் அதனை நிராகரித்து விட்டது. அவ்வாறு நிராகரித்தால் இருக்கிற அடுத்த ஏற்பாடு என்னவென்றால் அதற்கொரு மீளாய்வு குழு பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டு இரண்டு மாதத்தில் அந்தக் குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும்.

ஆனால் பிரதமர் தலைமையிலான அந்தக் குழு இதுவரையில் தன்னுடைய மீளாய்வு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இது அந்த 2017 இல் கொண்டு வந்த சட்டமூலத்திற்கு முரணாண செயற்பாடு. இதை ஒருதரும் நீதிமன்றிவ் சவாலுக்குட்படுத்தவில்லை.

உண்மையாகவே இந்த மாகாண சபை முறைமையை முழுக்க முழுக்க முடக்கி வைத்திருப்பது 2017 இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசால் கொண்ட வரப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் முறைமையினுடைய மாற்றத்திற்கான சட்டமூலம். இதற்கு ஒன்று செய்திருக்கலாம். ஒரு நாலு வரியில் அந்தச் சட்ட மூலத்தை மிளப் பெறுகிறோம் என்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்திருந்தால் இன்றைக்கு தேர்தல்கள் நடந்திருக்கும்.

அதiனைவிடுத்து அதிகாரம் வேண்டும், அதிகாரப் பகிர்வு வேண்டும், கூடிய அதிகாரம் வேண்டும், சமஷ்டி வேண்டும் என்றலெ;லாம் கதைக்கிற நாங்கள் இதைச் செய்யவில்லை. இதைச் செய்திருந்தால் தேர்தல் நடந்திரக்கும்.

ஆதலால் இருக்கின்ற மாகாண சபை முறைமையை கூட இன்றைக்கு தேக்க நிலைமைகக்கு அல்லது இயங்க முடியாமல் இருக்கிற நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசு தான் காரணம். அதற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தது கூட்டமைப்பு என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிரதமர் தலைமையிலான குழு இதுவரையில் அதனுடைய அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. உண்மையில் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

ஏனெனில் இரண்டு மாதத்தில் செய்ய வேண்டுமெனச் சட்டத்தில் சொல்லியிருக்கிறது. ஆனால் இதைக் கூடச் செய்யாமல் நாங்கள் ஐனநாயகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அரசு வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம் இதற்கு சட்டவாக்கத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது.

ஆகையினால் அந்தச் சட்டவாக்கத்தை புதிய பாராளுமன்றம் செய்து உடனடியாக தேர்தல் வரக் கூடிய ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. அதாவது அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் புதிய பாராளுமன்றம் ஊடாக நிச்சயமாக மாகாண சபைத் தேர்தல் நடாத்துவதற்குரிய செயற்பாடுகள் செய்யப்படும்.

ஏனென்றால் பிரதமர் மகிந்த ராஐபக்ச இதனை உறுதுpயாகச் சொல்லியிரக்கின்றார். அதே நேரம் 52 நாள் பிரதமராக மகிந்த ராஐபக்ச இருந்த போது இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் கூட கொண்டு வந்திருக்கிறார். அதாவது மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றி தேர்தலை நடத்துவதற்காகத் தான் அந்த ஏற்பட்டைச் செய்தார்கள். ஆகவே தேர்தல் வருகின்ற போது வினைத்திறன்மிக்க ஆட்சி அமைய வேண்டுமென்பதே எனது எதிரபார்ப்பாக உள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post