நெல்லியடி 'மைக்கலின் நேசக்கரம்' ஓராண்டு நிறைவில் கற்றல் உபகரணங்கள் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கல் - Yarl Voice நெல்லியடி 'மைக்கலின் நேசக்கரம்' ஓராண்டு நிறைவில் கற்றல் உபகரணங்கள் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கல் - Yarl Voice

நெல்லியடி 'மைக்கலின் நேசக்கரம்' ஓராண்டு நிறைவில் கற்றல் உபகரணங்கள் வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கல்


நெல்லியடி – மாலைசந்தை மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் உதவும் அமைப்பான 'மைக்கலின் நேசக்கரம்' ஆரம்பிக்கப்பட்டு முதலாம் ஆண்டு நிறைவு தினமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன.

மைக்கலின் நேசக்கரம் அமைப்பு கடந்த ஒரு வருடமாக தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் யுத்தப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக வன்னியில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்ற அதேநேரம் யாழ். மாவட்டத்தில் யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்காலச் சந்ததிகளான மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் மைக்கலின் நேசக்கரம் அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலாம் ஆண்டு நிறைவு விழாவின்போது யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களைச் சேர்ந்த 250 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அன்றைய தினம் வாழ்வாதார உதவியாக 1 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா நிதியும் வழங்கப்பட்டது. சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் செ. ரஜிவர்மனின் குடும்பத்திற்கு வீடு திருத்துவதற்கு 50 ஆயிரம் ரூபாஇ கிளிநொச்சியில் இலவசக் கல்விக்கான கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு எழுக அமைப்பிற்கு ஒரு லட்சம் ரூபாஇ அல்வாய் கிழக்கைச் சேர்ந்த சிறுவன் ஒருவின் மருத்துவச் செலவிற்கு 35 ஆயிரம் ரூபா என்பன வழங்கப்பட்டன.

மாலை சந்தை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய திருமண மண்டபத்தில் மைக்கலின் நேசக்கர பொறுப்பாளர் த. வேணுகானன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்இ பிரதம விருந்தினராக சமூக சேவையாளர் எஸ். பிறேம்குமார் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர் எஸ் -சேதுராஜா யாழ். ஊடக அமைய ஸ்தாபகர் சிரேஷ்ட ஊடகவியலாளர் இ.தயாபரன் உகரம் அறக்கட்டளை இணைப்பாளர் கு.நேருஜன் சிறகுகள் அமையம் இயக்குநர் த.சுஜீபன் சைவ மகா சபை உபதலைவர் ந.பொன்ராசா உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவர் ம.தனுஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.






0/Post a Comment/Comments

Previous Post Next Post