சொந்த நிலத்தில் வாழ்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வலிவடக்கு முகாம் மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை
சொந்த நிலத்தில் தாங்கள் வாழ்வதற்கு புதிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சமுதாய வலுவூட்டல்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்பாணத்திற்கு இன்று விஐயம் செய்த அமைச்சர் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் நீதவான் முகாமில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன் போது மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அமைச்சர் மக்களிடம் கேட்டறிந்தார்.
நாட்டில் ஏற்பட்ட யுத்த நிலைமைகளால் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி நிண்டகாலமாக முகாம்களில் வாழ்ந்து வருகின்றதாகவும் பல்வெறு கஸ்ர துன்பங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அந்த மக்கள் அமைச்சரிடம் எடுத்துக் கூறியிருந்தனர்.
ஆகையினால் நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் வாழ்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியிருந்தனர். குறிப்பாக கடந்த பல வருடங்களாக நாங்கள் முகாம்களில் வாழ்ந்து வருகின்றோம். எங்கள் நிலங்கை விடுவித்து மீளக் குடியேற்றுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
ஆதனடிப்படையில் எங்களுக்கு பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டிருந்தன. ஆனாலும் நாங்கள் தொடர்ந்தும் முகாம்களிலெயே வாழ்ந்து வருகின்றோம். ஆகவே தற்பொது வந்திருக்கின்ற புதிய அரசாங்கம் எங்கள் காணிகளை விடுவித்து நாங்கள் பிறந்து வளர்ந்த எங்கள் சொந்த நிலத்தில் வாழ்வதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
இச் சந்திப்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன,; யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன, மாவட்ட் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment