தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விரைவான தீர்வை நோக்கிய பயணத்திற்கு பொறிமுறை இராஐதந்திரத்தை தமிழ் தலைமைகள் ஒன்றிணைந்து உருவாக்கும் சரியான நேரம் இதுவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை வெறுமனே அரசியமைப்பு திருத்தம் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி ஒரு நாடு இருதேசம் என்ற கோசங்களுடன் பொறிமுறை நகர்வுகள் இன்றி அறிக்கைகள் மூலம் காலத்தை இனியும் கடத்ததாமல் செயற்பட முன்வர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..
தற்போது உள்நாட்டு கள சூழ்நிலை புதிய ஐனாதிபதியின் வருகையின் பின்னர் தெளிவான செய்தியை ஐனாதிபதி திருவாய் மலர்ந்துள்ளார். அதன் உண்மை உள் நாட்டில் குறிப்பாக ஆட்சியில் உள்ள அரசாங்கம் தமிழர்களுக்கு குறைந்த பட்ச தீர்வையும் தரமாட்டாது என்பதை வெளிப்படையாக கூறியமை.
இதனை தீர்வை விரும்பும் தமிழ் மக்கள் நியாயமாக பார்க்கின்றனர் காரணம் வெறுமனே வார்த்தை யாலங்களால் ஏமாற்று வார்த்தைகளை கூறாமல் தீர்வு தர முடியாது என நேர்மையாக கூறியதை ஒரு வகையில் ஏற்றுக் கொள்கின்றனர்.
தற்போது பந்து தமிழ்த் தலைமைகளின் கூட்டில் இதன் பிறகும் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டுக் கொண்டிருக்காமல் பொறிமுறை ராஐதந்திரத்தை உருவாக்குங்கள். அரசாங்கம் தமிழர் தரப்பிற்கு பல சாவால்களை விட்டுள்ளது .அவை அனைத்தும் சரியான பொறிமுறை ஊடாக தமிழர் தரப்பு கையாளுமாக இருந்தால் நிச்சயமாக இந்த அரசாங்கத்தின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்பதை கட்டியம் கூறுகின்றது .
இந்த நாடு பௌத்த சிங்கள நாடு அதிகாரப் பகிர்வு இல்லை ஐ.நா 30 தீர்மானம் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கோசம் உள் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என பல சாவல்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
இவற்றை தமிழர் தலைமைகள் சாதகமாக உரிய வெளியுறவு இராஐதந்திர பொறிமுறை ஊடாக உள் நாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமே தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
Post a Comment