தமிழ் மக்களை கோத்தபாய எதிர்ப்பாரா? அரவணைப்பாரா? பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் - Yarl Voice தமிழ் மக்களை கோத்தபாய எதிர்ப்பாரா? அரவணைப்பாரா? பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் - Yarl Voice

தமிழ் மக்களை கோத்தபாய எதிர்ப்பாரா? அரவணைப்பாரா? பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்


ஐனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதனால் சிறுபான்மை மக்களை எதிரியாகப் பார்க்கப் போகின்றாரா அல்லது அரவணைத்துக் கொண்டு செல்லப் போகின்றாரா என்பதே கேள்வியாக இருக்கிறதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

புதியதாக வந்திருக்கும் ஐனாதிபதி கோத்தபா ராஐபக்ச முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..

நாட்டில் இப்போது ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிற கோத்தபாய ரர்ஐபக்ச தான் தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது தென்னிலங்கைகயைப் பொறுத்தமட்டில் மிகத் தெளிவாகத் தெரிநிதது.

ஆனால் அவருக்கு எதிராக மிகப் பெருவாரியாக தமிழ் மக்கள் வாக்களித்திருந்தாலும் கூட அவர் தான் வெல்லுவார் என்பதை ஆரம்பத்திலேயே; தென்னிலங்கை நிலைமைகளை வைத்து ஊகித்திருந்தேன். ஆகையினால் அவர் வெற்றிபெற்றமை ஒன்றும் எனக்கு பெரிய ஏமாற்றமாகவோ அதிர்ச்சியாகவோ இருக்கவில்லை.

குறிப்பாக சிங்கள வாக்குகளால் தான் வெற்றி பெருவார் என கோத்தபாய கருதியிருந்தார். ஆனாலும் தமிழ் மக்களும் தனக்கு வாக்களிக் வேண்டுமென்று என்னை சந்தித்த போது கோரியிருந்தார். ஆனாலு;ம தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்காமலே தனியே சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆகவே தமிழ் மக்கள் வாக்களிக்காததை ஆதங்கமாக பார்க்கப் போகிறரா ஆத்திரமாக பார்க்கப் போகிறாரா என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனவே தமிழ் மக்கள் உட்பட சிறுபாண்மை மக்களை அணைத்துச் செல்ல போகிறாரர் அல்லது எதிரியாக பார்கக்ப போகிறாரா என்பதையும் அனைவரையும் அனைத்துக் கொண்டு  நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லப் போகிறராரா என்றும் பார்க்க வேண்டும்.

தேர்தலுக்குப் பிறகு சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளினால் தான் வென்றேன் என்று சொல்லிய விசயமானது தமிழ் மக்களை எப்படி பார்க்கப் போகின்றார் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏனென்றால் தொடர்ந்தும் பெரும்பான்மை மக்களுடை விருப்பங்களைத் தான் நிறைவேற்றுவாரா என்ற சந்தேகமும் இருந்தது.

முக்கியமாக அரசியல் தீர:வு விசயத்தில் பெரும்பான்மை மக்கள் விரும்பாத எதையும் செய்ய மாட்டேன் என்று கூறுகின்றதானது நிச்சயமாக இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு வர முடியாது என்பதனையே எடுத்துக் காட்டுகிறது. பெரும்பான்மை மக்களின் விருப்பத்துடன் தான் என்றால் அது இல்லை.

ஏனென்றால் கடந்த எழுபது வருடமாக பார்த்து வந்திருக்கின்ற அடிப்படையில் குறிப்பாக அரசியல் தீர்வு சம்மந்தமான எந்த நகர்வுகள் எடுக்கின்ற போதும் பெரும்பான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளாக இருந்தாலென்ன அதன் பிரதிநிதிகளாக இருந்தாலென்ன அந்த அரசியல் தீர்வு விசயத்தில் எதிராகவே செயற்பட்டிருக்கின்றார்கள்.

ஆகவே இந்தக் கால கட்டத்தில் ஒரு நியாயமான அரசியல் தீர்வு ஒன்று வருமென்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. ஒரு அமைதியான காலம் இருந்தாலே போதுமென்ற நிலைப்பாடு தான் இன்று தமிழ் மக்கள் மத்தியிலே இருக்கிறது. அது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தமட்டிலே யுத்த காலத்தில் நடந்தது போல ஒரு நிகழ்வுகள் நடக்க முடியாது. நடக்காது என்று தான் நான் நினைக்கின்றேன்.

நான் அவருடன் பல தடவைகள் கதைத்திருக்கின்றேன். அவர் இன்று இந்த நாட்டை மிகச் சிறந்த நாடாக பொருளாதாரத்தில் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்பதிலே அக்கறை காட்டுவதாக நான் கருதுகிறேன். அவருடைய கதைககளில் இருந்து நான் அதை எடுக்கக் கூடியதாக இருக்கின்றது.

எது எப்படியாக இருப்பினும் அவர் வடகிழக்கிற்கு எப்படியான விதத்திலே செயற்படப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அடுத்ததாக அவர் நியமித்தக் கொண்டிருக்கின்ற அதிகாரிகளை எடுத்துப் பார்த்தால் இரானுவத்தினரை தான் கூடுதலாக தன்னுடைய முக்கிய பதவிகளுக்கு நியமிப்பதாக பொதுவாகவே ஒரு அபிப்பிராயம் இருக்கிறது.

ஆகவே அந்த இரர்னுவ அதிகாரிகள் எப்படி செயற்படப் போகின்றார்கள் அவர்கள் தொடர்ந்தும் இரர்னுவ ரீதியிலான கண்ணோட்டத்தில் தான் செயற்படப் போகின்றார்களா இல்லையா என்பதையெல்லாம் உண்மையிலையே உடனடியாக நாங்கள் கூற முடியாது. பொறுத்திருந்து பார்த்தால் தான் அவர்களது செயற்பாடுகளைக் கூற முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post