யாழ் கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்குமர்று ஐனாதிபதிக்கு சித்தார்த்தன் அவசர கடிதம் - Yarl Voice யாழ் கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்குமர்று ஐனாதிபதிக்கு சித்தார்த்தன் அவசர கடிதம் - Yarl Voice

யாழ் கிளிநொச்சியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்குமர்று ஐனாதிபதிக்கு சித்தார்த்தன் அவசர கடிதம்


யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் நடைபெறும் அளவிற்கதிகமான மணல் கடத்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மருதங்கேணி பளை கரைச்சி பிரதேசசெயலக பிரிவுகளில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வுஇ விற்பனை தொடர்பாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பளை பிரதேசசெயலாளர் பிரிவில் கிளாலி அல்லிப்பளை புலோப்பளை இயக்கச்சி மந்துவில் சுண்டிக்குளம் பகுதிகளில் தனியார் காணிகளில் அடாத்தாக மண் அகழ்வதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வால் ஏற்படும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டி இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post