யாழ்ப்பாணம் புதிய சிறைச்சாலை முன்பாக பௌத்த சின்னங்கள் வைப்பதற்கு மிக இரகசிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இரவோடிரவாக புத்தர் விஐயனின் சிலைகளும் இன்று கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட வியைன் வந்ததைத் குறிக்கும் வகையில் விஐயனின் சிலையும் புத்தர் சிலைகளை வைத்து நாளை சனிக்கிழமை காலை திறப்பு விழா செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. அதாவது நாளை காலை சிறைச்சாலைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் வரவுள்ள நிலையில் அவரைக் கொண்டு இதனைத் திறந்து வைப்பதற்கு இந்த நடவடிக்கைகள் மன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பண்ணைக் கடற்கரைக்கு அருகில் புதிய சிறைச்சாலை வளாகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அங்கு புத்தர் சிலையொன்று வைப்பதற்கு மிக இரகசியமான முறையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதாவது குறித்த இடத்தில் புஇந்த விஐயனின் சிலையையும் பௌத்த சின்னங்களைக் குறிக்கும் வகையிலான சிங்னங்களையும் வைப்பதற்கான நடவடிக்கைகள் இரவோடிரவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய புதிதாக 3 சிலைகளும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இங்கு பௌத்த சின்னங்களை வெளிப்படுத்தும் வகையில் விஐயனின் சிலையும் புத்தர் படங்களையும் வைக்கின்ற இந்த விடயம் தொடர்பில் அறிந்து கொண்ட யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் தலைமையில் சில மாநகர சபை உறுப்பினர்களும் இன்றிரவு சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதே வேளையில் அங்கு மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய இருதரப்பினரிடமும் அனுமதி பெற்றப்படாமல் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடவடிக்கைக்கு மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட அந்தப்பகுதி மக்கள் எனப் பலரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும் நாளை காலை 8.30 மணிக்கு அங்கு சிலை வைப்பதற்கு எதிராக அப் பகுதியில் போராட்டமொன்றையும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment