இந்தியக் குடியுரிமை யோசனையில் ஈழத்தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் கமலஹாசன்
இந்தியாவின் ராஜ்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்திய குடியுரிமை யோசனையில் ஏன் இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் புறக்கணிக்கப்பட்டனர் என்று மக்கள் நீதி மையத்தின் ஸ்தாபகர் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த யோசனை சிறந்த யோசனையாக இருக்குமாயின் இந்த இரண்டு மக்கள் பிரிவினரும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவேஇ ஏன் இவர்களை இந்த யோசனை உள்ளடக்கவில்லை என்று அவர் வினவியுள்ளார்.
முன்னதாகஇ குரு ரவிசங்கரும் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் இந்த யோசனையில் உள்வாங்கப்படவேண்டும் என்று கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த யோசனையின்கீழ் பாகிஸ்தான் பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து புறக்கணிப்பு மற்றும் பிரச்சனைகள் காரணமாக 2014 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்கு வந்த ஹிந்து சீக்கியர் பௌத்தர்கள் ஜெய்ன் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது.
எனினும் அண்டை நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் அகதிகள் இந்த யோசனையில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment