இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் - விக்கினேஸ்வரன் வலியுறுத்து - Yarl Voice இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் - விக்கினேஸ்வரன் வலியுறுத்து - Yarl Voice

இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் - விக்கினேஸ்வரன் வலியுறுத்து


இந்தியாவிலுள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு இரட்டைப் பிரர்ஐhவுரிமை வழங்கப்படுவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வடக்கு முன்னாள் முதலமைச்சருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஏற்பாட்டில் இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி உதவியில் வடமராட்சி கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியால்; உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அங்குள்ள ஈழத் தமிழ் மக்களுக்கு குடியுரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த விடயம் குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு கருத்து தெரிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது..

மனிதாபிமான ரீதியாக தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவித்திருக்க கூடும். அதிலே எங்களுக்கு எதிர்ப்பில்லை. ஆனால் இரண்டு விடயங்களை நாங்கள் கருத்திலெடுக்க வேண்டும். எங்களுடைய மக்கள் மீண்டும் தங்கள் பிரதேசங்களுக்கு திரும்ப வேண்டுமென்ற காரணம் இருக்கிறது.

ஏனெனில் பலரும் எங்கள் பிரதேசங்களில் இருந்து வெளியேறியபடியால் வெளி மாகாணங்களிலிருந்து மக்களைக் கொண்டு வந்து இங்கே குடியமர்த்துகிறார்கள். ஆனால் எம்முடைய மக்கள் திரும்பவும் இங்கு வந்து குடியேறினால் தான் எங்களுடைய இருப்பை நாங்கள் வலுப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் அதே நேரத்தில் அந்த மக்களுடைய பிரச்சனைகளையும் நாங்கள் முகங்கொடுக்க வேண்டும். இது சம்மந்தமாக சில காலத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்த இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியதில் அவர் எனக்கொரு உத்தரவாதம் தநதிருந்தார்கள்.

அதாவது உங்களுடைய மக்கள் இங்கு திரும்பி வருகின்ற போது அசர்களுடைய பிள்ளைகளின் மேற்படிப்பு சம்மந்தமாக அவர்கள் எந்தெந்த கல்லூரிகளில் இருக்கிறார்களோ அல்லது கிட்டிய கல்லூரிகள் எது இருக்கிறதோ அதில் விடுதி வசதிகள் கொடுத்து அவர்கள் தங்களுடைய கல்வியை அங்கு மேம்படுத்தவும் தொடர்ந்த படிக்கவும் அதற்குரிய வசதிகளை நாங்கள் ஏற்படுத்திப் கோடுப்போம் என்றார்.

அதாவது தாய் தந்தையர் இங்கு வந்தால் கூட பிள்ளைகள் அங்கிருந்து தமது கல்வியை முடித்துக் கொண்டு வரக் கூடிய விதத்திலே நடவடிக்கைகள் எடுக்க முடியுமென்று உத்தரவாதம் தந்தார்கள். இந்த நிலையில் நாங்கள் இப்பொழுது நினைக்கின்றோம் இரட்டைக் குடியுரிமை இவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்று தான்.

ஏனெனில் இந்தியாவிலே குழந்தைகளை கல்வி காரணமாகவோ மற்றப் பிள்ளைகள் சம்மந்தமாக எந்தெந்த வேலைகள் இருந்தாலும் அவற்றை கவனித்தக் கொள்ளவும் தங்களுடைய நாட்டிற்கு திரும்பி வந்து இங்கு வேலை செய்யக் கூடிய விதத்தில் இரண்டைக் குடியுரிமை கொடுப்பது தான் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம்.

இரண்டாவதாக இது சம்மந்தமாக போதிய நடவடிக்கைகளை எடுத்து அவர்கள் திரும்பி வரக்கூடிய விதத்திலே நன்மைகளை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடியதற்கு உரிய அந்த கட்டமைப்புக்களை அமைத்துக் கொடுக்க வேண்டிய அவசியமும் இந்தியாவிற்கு இருக்கிறது. அதனை இந்திய அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இந்திய அரசாங்கத்திற்கு பொருளாதார ரீதியான சில நன்மைகள் இருக்கின்றன. அந்த நெடுங்கால நன்மைகளை உத்தேசித்து அவர்களுக்கு சில நடவடிக்கைகள்எடுத்த நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதில் பிரச்சனைகள் இருக்காது என்று நம்புகின்றோம்.

ஆகவே திரும்பி வரும் எங்களுடைய அகதிகளுக்கு இந்தியா போதிய உதவிகளை எங்களுடன் சேர்ந்து செய்ய வேண்டுமென்றும் அதே நேரத்தில் அந்த மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை முகங்கொடுக்க வேண்டிய நிலையிலே அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்து என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post