இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை பேச்சுவார்த்தை ஆரம்பம்
இந்தியா-சீனா இடையேயான எல்லைத் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு நாட்டு உயர்நிலைக் குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கான சிறப்பு பிரதிநிதிகளின் 21ஆவது கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிலையில் 22ஆவது கூட்டம் டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகின்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இந்திய குழுவும்இ சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யி தலைமையில் அந்நாட்டு குழுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும்இ சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் சந்தித்த பிறகுஇ நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை என்பதால் குறித்த பேச்சுவார்த்தை முக்கியதுவம் பெறுகிறது.
இந்தியா-சீன இடையே 3488 கிலோமீட்டர் நீள எல்லைக் கோடு தொடர்பாக பிரச்சினைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment