வெள்ளைவான் தொடர்பில் விசாரணை செய்யாமல் ராஜிதவை கைது செய்வது ஏற்புடையதல்ல - சுமந்திரன்
வெள்ளை வேன்' விவகாரம் என்பது கடந்த 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எமது சமூகத்தில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்கையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல்இ அந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ராஜித சேனாரத்னவை சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்ய முயற்சிப்பது ஏற்புடையதல்ல என கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் வெள்ளைவான் விவகாரம் தொடர்பாக அவர்கள் கூறுவது உண்மையா? பொய்யா? அத்தகைய சம்பவங்கள் எங்கு நடைபெற்றது? அவற்றுக்கு வேறு சாட்சிகள் உள்ளதா? என்று ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Post a Comment