சட்டவிரோ மணல் அகழ்விற்கு எதிராக யாழ், கிளிநொச்சியில் போராட்டங்கள் - Yarl Voice சட்டவிரோ மணல் அகழ்விற்கு எதிராக யாழ், கிளிநொச்சியில் போராட்டங்கள் - Yarl Voice

சட்டவிரோ மணல் அகழ்விற்கு எதிராக யாழ், கிளிநொச்சியில் போராட்டங்கள்




வடக்கு மாகணத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்விற்கு எதிராக யாழ். கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டும் மணல் அகழ்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தீயும் இந்த சட்டவவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் களப் பயணமும் மேற்கொள்ளப்பட்டது.

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் வடமராட்சி கிழக்கு குடாபரப்பு பகுதியில் மண் அகழவு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்ற இடத்தில் முதற்கட்டமாக இக் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருதங்கேணிப் பிரதேச செயலகத்திற்கான மகஐரொன்றும் கையளிக்கப்பட்டது.

இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வு இ;ம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அங்கும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தின் சாகவச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி, கச்சாய் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வைப் பார்வையிட்டதுடன் அங்கும் இதே போன்று கவனீயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன் பின்னர் யாழ் தீவகம் பகுதிகளான மண்கும்பான் மற்றும் சாட்டிப் பகுதிகளில் மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பகுதிகளையும் குறித்த குழுவினர் பார்வையிட்டதுடன் அங்கும் போராத்தில் ஈடுபட்டனர்.

இறுதியாக யாழ் பண்ணைப் பகுதியில் கவனயீர்ப்பு போராத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மணல் அகழ்வு தொடர்பில் பொது மக்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாட்டையும் முன்னெடுத்தனர்.

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post