இந்திய விமானப்படைக்கு 200 போர் விமானங்களை கொள்வனவு செய்ய இருப்பதாக பாதுகாப்புத்துறைச் செயலாளர் அஜய் குமார் தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அஜய் குமார் மேலும் கூறியுள்ளதாவது..
'விமானப்படை திறனை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது.
அந்தவகையில் 200 போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
அதேவேளை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து தேஜாஸ் மார்க்-1 என்ற 83 இலகுரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment