45 வயது வரை விளையாட இலக்கு என டி20 கிரிக்கெட்டில் 'யுனிவர்ஸ் பாஸ்' என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் 40 வயதான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் நேற்று அளித்த ஒரு பேட்டியில் ''இந்த கிறிஸ் கெய்லின் அதிரடி ஜாலத்தை இன்னும் உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.
நானும் இந்த விளையாட்டு மீது தனியாத ஆர்வத்துடன்தான் இருக்கிறேன். எவ்வளவு நாட்கள் என்னால் விளையாட முடியுமோ? அவ்வளவு நாட்கள் விளையாட விரும்புகிறேன். எனக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் லீக் போட்டியில் விளையாட இன்னும் நிறைய அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.
உடல் ரீதியாக இன்னும் நன்றாகதான் இருக்கிறேன். இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவீர்கள் என்று கேட்கிறீர்கள். என்னை பொறுத்தமட்டில் 45 நல்ல நம்பர். 45 வயது வரை விளையாடுவது எனது இலக்காகும்.
இந்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே சொன்ன மாதிரி அணியில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்'' என்று தெரிவித்தார்.
கிளிஸ் கெயிலின் இலக்கு 45
Published byYarl Voice Editor
-
0
Tags
sports
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.
Post a Comment