அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று(புதன்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ராணுவ தளம் மட்டும் சிறிது சேதமடைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.
ஈரான் தனது ஆணு ஆயுத கனவை கைவிட வேண்டும். நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை ஈரான் அணு அயுதங்களை வைத்திருக்க அனுமதிக்க மாட்டேன்.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும். ஈரான் மீது மேலும் பொருளாதார தடைக்கள் விதிக்கப்படும்.
உள்நாட்டில் மட்டுமின்றி மற்ற நாடுகளிலும் பயங்கரவாதிகளை வளர்த்து வருகிறது. ஈரானுக்கு எதிராக இராணுவத்தை ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment