சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'தலைவர் 168' படத்தில் அஜித்தின் விஸ்வாசம் ஸ்டைலில் ஒரு பாடல் உருவாக்கி இருக்கிறார்கள்.
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' திரைப்படம் ஜனவரி 9-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இந்த படத்தில் குஷ்பு மீனா கீர்த்தி சுரேஷ் சூரி பிரகாஷ்ராஜ் சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.
முதல்கட்ட படப்பிடிப்பில் பாடல் ஒன்றை படமாக்கியிருக்கிறது படக்குழு.
இந்த பாடல் சிவா - அஜித் இணைப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'விஸ்வாசம்' படத்தின் 'தூக்குதுரை' பாடல் பாணியில் நாட்டுப்புற பாடல் பின்னணியில் உருவாக்கியிருக்கிறார் இமான்.
இந்த பாடல் படப்பிடிப்பில் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஐதராபாத் படப்பிடிப்பு முடிந்தவுடன் புனேவில் சில முக்கியக் காட்சிகளை 20 நாட்களுக்குப் படமாக்க செல்ல இருக்கிறார்கள்.
Post a Comment