இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி கற்றல் செயற்பாடுகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுரேன் ராகவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது..
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கிய ஆளுநர்களில் சிறந்த ஆளுநர் எனும் பட்டம் என் பின்னால் இன்னும் இருக்கின்றது. எனக்கு இருப்பது ஒரு ஆண்மா ஒரு உயிர் மற்றும் ஒரு உடல் இவை மூன்றும் இருக்கும் வரை தமிழ் மக்களுக்கு சேவை செய்வதற்கு எந்த விதத்திலும் தான் தயாராக இருக்கிறேன்.
அது ஆளுநராகவும் இருக்கலாம் அல்லது வேறு ஏதாவதாகவும் இருக்கலாம். அதற்காக அரசியலில் இறங்கப்போகின்றேனா அல்லது மீன்டும் ஆளுநராக வரப்போகின்றீர்களா எனும் கேள்வியை பலரும் கேட்கின்றனர்.
ஆனாலும் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் நான் உதவி செய்வதற்கு தயாராகவே இருக்கிறேன். அதனடிப்படையில் தமிழ் மக்களுக்கான எனது செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
Post a Comment