தொட்டு விடும் தூரம் படக்குழுவினருக்கு எஸ்.ஏ.சந்திரசேகரன் வாழ்த்து
விவேக் ராஜ் மோனிகா சின்னகொட்லா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தொட்டு விடும் தூரம்'. வி.பி.நாகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் சிங்கம் புலி பாலசரவணன் லிவிங்ஸ்டன் சீதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படம் வரும் ஜனவரி 3ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனை படக்குழுவினர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து படத்தின் டிரைலரையும் காண்பித்து ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார்கள்.
இந்நிகழ்வில் இயக்குனர் நாகேஸ்வரன்! தயாரிப்பாளர் ராமநாதன்!.. இணை தயாரிப்பாளர் சுரேஷ் ஆனந்த் மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களை சந்தித்தது எங்களுடைய வாழ்வில் ஒரு முக்கியமான தருணம் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.
Post a Comment