பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு தொகை காணியை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்வதற்கான முயற்சி யாழ்.பிரதேச செயலக மற்றும் நில அளவை திணைக்கள அதிகாரிகளால் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்த நிலைமையில்
இதனை எதிர்த்து மக்களும் அரசியல்வாதிகளும்
போராட்டம் நடாத்தியிருந்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்..
பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கவேண்டாம். என முன்னர் ஒரு தடவை அளவீட்டுக்காக வந்திருந்த அதிகாரிகளிடம் கூறி எங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். ஆனால் மீண்டு ம் மக்களின் காணியை சுவீகரிக்க முயற்சிக்கப்படுகின்றது.
எனவே இதுவே இறுதி தடவயாக இருக்க வேண்டும். இனி ஒரு தடவை அளவீட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் யாழ்ப்பாண பிரதேச செயலகம் நில அளவை திணைக்களம் யாழ்.மாவட்ட செயலகம் மற்றும் தேவை ஏற்படின் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டுப் போராட்டம் நடாத்துவதற்கு நாங்கள் நிர்பந்திக்கப்படுவோம்.
எனவே மக்களின் காணிகள் மக்களுக்குரியவை அவற்றை அபகரிக்கும் முயற்சிகளை அரசும் அரச திணைக்களங்களும் உடனடியாக நிறுத்தவேண்டும். என இவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்
Post a Comment