விஐயின் மாஸ்டர் படப்பிடிப்பில் விஐய்சேதுபதியின் காட்சிகள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி - Yarl Voice விஐயின் மாஸ்டர் படப்பிடிப்பில் விஐய்சேதுபதியின் காட்சிகள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி - Yarl Voice

விஐயின் மாஸ்டர் படப்பிடிப்பில் விஐய்சேதுபதியின் காட்சிகள் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி


விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில்இ விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம் வேதாஇ பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார். சீதக்காதியில் வயதானவராக வந்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்தார். இந்த கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

பட விழாக்களில் சூப்பர் டீலக்ஸ் திரையிடப்பட்டு விருதுகளையும் பெற்றது. தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடித்து இருந்தார். தற்போது கடைசி விவசாயிஇ லாபம் படங்களில் நடித்துள்ளார். இவை விரைவில் திரைக்கு வர உள்ளன. மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன.

 இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.விஜய்யின் புதிய படமான மாஸ்டர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது நண்பனாக வருகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அந்த காட்சிகள் லீக் ஆகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post