எதிர்ப்புகள், புறக்கணிப்புக்களால் எதனையும் சாதிக்க முடியாது - கூட்டமைப்பு ஈபிடிபி ஐதேக கட்சிகளை கடுமையாக குற்றஞ்சாட்டும் அங்கஐன் - Yarl Voice எதிர்ப்புகள், புறக்கணிப்புக்களால் எதனையும் சாதிக்க முடியாது - கூட்டமைப்பு ஈபிடிபி ஐதேக கட்சிகளை கடுமையாக குற்றஞ்சாட்டும் அங்கஐன் - Yarl Voice

எதிர்ப்புகள், புறக்கணிப்புக்களால் எதனையும் சாதிக்க முடியாது - கூட்டமைப்பு ஈபிடிபி ஐதேக கட்சிகளை கடுமையாக குற்றஞ்சாட்டும் அங்கஐன்

எதிர்ப்புக்கள் புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் இவ்வாறு எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பை செய்பவர்கள் மக்களுக்கு விரோதமாச் செயற்படுபவர்களே என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சாடியுள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஐன் இராமநாதன் தலைமையில் மாவட்டச் செலய மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஐயகலா மகோஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை.

மேலும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்திற்குச் செல்வதை புறக்கணிப்பதாக அறிவித்து செல்லாத நிலையிலும் அக் கட்சியின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் விஐயகலாவின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலைமையில் கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஐன் இராமநாதன் பாராமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்த கொள்ளாதது அல்லது புறக்கணித்தமை தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டிருந்தார். இதன் போது தலைமையுரை ஆற்றுகையில் மேலும் தெரிவித்தாவது..

யாழ் மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இக் கூட்டத்திற்கு இங்குள்ள மக்களின் பிரதிநிதிகள் சமூகமளிக்கவில்லை. அவ்வாறு சமூகமளிக்காது எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது அல்லது கூட்டத்தைப் புறக்கணிப்பதென்பது மக்களுக்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகவே அமைகிறது.

ஆகையினால் இவ்வாறான எதிர்ப்புக்கள் அல்லது புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது. மக்களுடைய பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் கலந்து பேசி ஒரு தீர்மானம் எடுத்தே செயற்பட வேண்டும். அவ்வாறு பேசுவதனூடாகத் தான் மக்களுக்கு எதனையுமு; பெற்றுக் கொடுக்கவும் முடியும்.

எமது மக்களுக்கு பல பிரச்சனைகள் தேவைகள் இரக்கின்றன. அவை அனைத்தையும் என்னாலும் தீர்த்து வைக்க மடியாது. அவை தொடர்பில் என்னாலான உரிய நடவடிக்கைகளை எடுக்க தயாராகவே இருக்கிறேன். எல்லாத்தையும் என்னால் செய்ய முடியாது. அவ்வாறு செய்வதற்கு நான் கடவுளும் அல்ல.

ஆகவே மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளில் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்துச் செயற்பட வேண்டும். அதனைவிடுத்து எதிர்ப்பு காட்டுவதாலோ அல்லது புறக்கணிப்பதாலோ எதனையும் சாதிக்க முடியாது. ஆகவே மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளில் அவ்வாறு செய்வதென்பது மக்களுக்கு விரொதமானது. ஆகையினால் அவ்வாறான செயற்பாடுகளைச் செய்பவர்களும் மக்களுக்கு விரோமாகச் செயற்படுபவர்களே என்றார்.



0/Post a Comment/Comments

Previous Post Next Post