தமிழ் மக்கள் எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு சிங்கள மக்களையே அரசாங்கம் ஏமாற்றி வருகிறது - குகதாஸ் குற்றச்சாட்டு - Yarl Voice தமிழ் மக்கள் எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு சிங்கள மக்களையே அரசாங்கம் ஏமாற்றி வருகிறது - குகதாஸ் குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழ் மக்கள் எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு சிங்கள மக்களையே அரசாங்கம் ஏமாற்றி வருகிறது - குகதாஸ் குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு சிங்கள மக்களையே அரசாங்கம் ஏமாற்றி வருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமா சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..

சிறிலங்கா அரசாங்கம் வடகிழக்கு தமிழர்கள் மீது மேற்கொள்ளும் கடுமையான இனவாத போக்கு இலங்கைத் தீவிற்கு ஆரோக்கியமானதல்ல. இலங்கைத் தீவின் பூகோள அமைவு காரணமாக இலங்கை அரசியலில் பிராந்திய பூகோள வல்லரசுகளின் காலணித்துவம் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய வண்ணமே இருக்கும்.

இதனால் சிறிலங்கா அரசாங்கம் கூறுகின்ற பல விடையங்கள் சிங்கள மக்களை ஏமாற்றுவதாகவே அமையும் ஆனால் ஆட்சியாளர்கள் தங்களது ஆட்சிக் கதிரைகளை பிடித்து தங்கள் சுக போகங்களை நன்றாக அனுபவிக்க முடியும் .

அண்மைக்காலமாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் அதற்கான அனுசரனையை தாம் வழங்கப் போவதில்லை என உள்நாட்டு ஊடகங்களில் உளறுகின்றனர்.
ஆனால் நேரடியாக மனிவுரிமைச் சபைக்கு அறிவிக்கவில்லை அதன் பிரதிகளை நிராகரித்தாக காட்ட கிழிக்கவும் இல்லை எனவே வெறுமனே தேர்தல் இலக்கை அடிப்படையாக வைத்து சிங்கள மக்களை ஏமாற்றுகின்றனர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவின் மிலேனியம் சலேஞ் உடன்படிக்கை நாட்டுக்கு மிக ஆபத்தானது அதனை செய்பவர்கள் நாட்டிற்கு துரோகம் செய்பவர்களே என தேர்தல் காலத்தில் பிரசாரங்களை முன்னெடுத்தவர்கள் இன்று இக்கட்டான நிலையில் பரிசீலிக்கின்றனர.; ஆனால் உடன்படிக்கைப் பிரதிகளை கிழிக்க முடியவில்லை .

சீனாவின் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தில் காலமாற்றங்கள் செய்வதாக கூறினார்கள். முன்னேற்றங்கள் எவையும் இல்லை. ஆகவே அரசாங்கம் தமிழர்களை இனவாத மனநிலையில் பார்க்க எண்ணி கொடுக்கும் வாக்குறுதிகள் சிங்கள மக்களை ஏமாற்றுவதாகவே அமைந்துள்ளன.

எனவே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் சர்வதேச ஆதரவுடன் நாட்டை முன்நோக்கி நகர்த்தல் என்பது சாத்தியமற்றது என்பதை அரசாங்கம் விரைவில் உணர்ந்து கொள்ளும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post