இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடாத்தினார். அச் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது..
13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா ராஐதந்திர முறையில் அனுகும்
ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச இந்தியாவிற்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்த போது 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்துமாறு இந்தியப்பிரதமர் வலியுறுத்தியதாக செய்திகள் வந்தது. அதே நேரத்தில் அங்கு வைத்தே அந்த 13 ஆவதில் உள்ள சில விடங்களை வழங்க முடியாதது என்று ஊடகங்களிடம் ஐனாதிபதி தெரிவித்திருந்தார்
ஆயினும் இந்த இடத்தில் இருக்கிற ஒரு முக்கியமான விடயம் இங்கிருக்கிற எல்லாருக்குமே பொருந்தும.; என்னைப் பொறுத்தவரையில் 13 ஆவது திருத்தத்தைப் பற்றிக் கதைப்பதில்லை. அதையே கோட்டபாய ராஐபக்சவும் சொல்லியுள்ளார். அதாவது 13 ஆவது திருத்தம் என்பது ஏற்கனவே அரசமைப்பில் உள்ள ஒரு அங்கம். ஆனாபடியால் 13 ஆவது திருத்தத்தின் ஏற்றுக் கொண்டு தான் கதைக்கிறார்.
ஐரோப்பிய யுனியன் உறுப்பினர்களுக்கும் அதை சொல்லியுள்ளார். அந்தக் கூற்றை பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. அது குறித்து நாங்கள் பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவும் தேவையில்லை. ஏனென்றால் இப்படியான கூற்றுக்கள் கடந்த காலத்தில் நடந்து தான் இருக்கிறது.
உதாரணத்திற்கு தனிச் சிங்களம் என்று இயற்றப்பட்டு அது மாத்திரம் இந்த நாட்டில் ஒரே ஒரு அரச மொழி என்ற நிலைப்பாடு கொண்டு வரப்பட்ட போதும் காலப் போக்கில் மாறி இப்பொழுது இந்த அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் இரண்டு தேசிய பாசைகள் என்று ஆகிவிட்டது. ஆனபடியால் மாற்றங்கள் நிகழும்.
அதாவது இப்ப ஐனாதிபதி இப்படிச் சொல்கிறதால அது தான் இறுதி முடிவு. அது தான் இந்த நாட்டின் தலை விதி என்று நினைக்கேலாது. ஆக மாற்றங்கள் நிகழும். இப்பொழுது அவர் சொல்கிறதை அவருடைய கட்சி அந்தப் பாராளுமன்றம் நிறைவேற்றலாம். அந்த மாற்றங்கள் தொடர்ந்தும் நடைபெறலாம். இதில் அச்சம் கொள்வதற்கோ அவருடைய கருத்தைப் பற்றி நாங்கள் ஏமாற்றப்பட்டதாக கருதப்படுவதற்கோ இடமில்லை.
ஆகவே நாங்கள் எங்களுடைய பணியை அதாவது எவ்வாறு தந்தை செல்வநாயகத்தை தொடர்ந்து வௌ;வேறு கட்சிகளாக இருந்தாலும் அந்த இலட்சியம் நோக்கத்தை எல்லாருமே எடுத்துக் கொண்டார்கள். ஆனபடியால் தொடர்ந்தும் அதை நாங்கள் முன்னெடுப்பது தான் பேசுபொருளாக இருக்கும்.
நான் ஏற்கனவே சொன்னமாதிரி இதைப்பற்றி பெரிய அளிவில் எடுக்கத் தேவையில் கருத்துக்கள் சொல்லப்படலாம். ஆழமான கருத்துக்கள் இருக்கிறது. 13 ஆவது திருத்தம் தான் எங்களுடைய அரசியல் தீர்வென்று நாங்கள் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லைத் தானே. ஆனபடியால் அது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும் தானே.
ஆனால் சில விசயங்கள் பகிரங்கமாகப் பேசப்பட முடியாதவையாக இருக்கும். இந்தியா என்ன வகையில் இதற்கான பிரதிபலிப்பைக் காட்டும் என்பதை நாங்கள் ஊகிக்க முடியாது. ஆனால் இந்தியா பிரதிபலிக்கும். பிரதிபலிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது நிச்சயமாக நடக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதற்கும் மேலாக நாங்கள் அதைப் பகிரங்கப்படுத்தி பேசி ஒரு முரண் நிலையை தோற்றுவிக்கிறது பொருத்தமற்றது. இந்தியா அதனுடைய இராஐதந்திர முறையில் இந்த விடயத்தை தொடர்ந்து எடுக்குமென்ற தெளிவான நம்பிக்கை எனக்கும் எங்களுக்கும் இருக்கிறது.
தீர்மானத்தை அவமதிப்பதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்காது
வடக்கு மாகாண சபையில் இனவழிப்பு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருந்தது. ஆந்த தீர்மானத்தை கொண்டு வந்தது தொடர்பில் என்னையும் குறிப்பிட்டு முதலமைச்சரும் சொல்லியிருப்பதை ஒரு பேட்டியில் பார்த்திருக்கிறேன். அது எனக்கு ஆத்ம திருப்தி தருகிறது. ஏனென்றால் நான் செய்த பணி அது. முதலமைச்சரை நான் எதிராக பார்ப்பது இல்லை.
ஆனால் அவருடைய கொள்கைகளில் செயற்பாடுகளில் முரண்பாடு இருக்கிறது. ஆயினுமு;; அவரும் மனச்சாட்சியாக அந்தத் தீர்மானத்தில் நாங்கள் செயற்பட்டது தொடர்பில் தன்னுடைய பெட்டியொன்றில்; செய்து காட்டியிருக்கிறார்.
அந்த தீரமானத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆனைக்குழுவிற்கு அனுப்பி வைத்தது நான் தான். அது அப்படியாகத் தான் இருக்கும். அதில் மாற்றமும் இல்லை. நாங்கள் பின்வாங்கப் போறதும் இல்லை. அது நான் நினைக்கிறேன். இந்த அரசாங்கம் அல்லது அரசாங்கத்தைச் சார்ந்தவர்கள். இப்பொழுது ஐனாதிபதியை விட அவரோடு இருக்கிற கோஸ்டி தான் அதிகம் கதைக்கிறது.
அவர்கள் ஐ.நா.சபையையோ ஆணைக்குழுவையோ ஏதோ இங்கிருக்கிற சில்லறைக் கட்சிகளைப் பார்க்கிறது போன்று பார்ப்பதாகவே எனக்கு தெரிகிறது. ஆனால் இந்த விடயங்களில் சர்வதேச பலங்கள் கூடியிருக்கிறதென்பதும் சர்வதேச செயற்பாடுகள் பலமாக வந்துள்ளதென்பதைம் இவர்கள் புரிந்த கொள்ள வேண்டும்.
ஆனபடியால் அந்தத் தீர்மானங்களில் எங்களிலும் பார்க்க கூடுதலாக கரிசனை காட்டக் கூடியவர்கள் சர்வதேச சாடுகள். அதாவது இந்தத் தீர்மானத்தோடு சம்மந்தப்பட்டவர்கள் அந்த சர்வதேச நாடுகள் தான். ஆகவே தங்களை ஒரு நாடு அவமதிக்கிறதென்பதை அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.
ஆகையினால் அவர்களிடத்தே இதை விட்டு விட வேண்டும். ஆனால் அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கத்தினர் எதிர்க்கிறார்கள் அல்லது குப்பைத் தொட்டிக்குள் போடப் போவதாகச் சொல்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளிக் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் அந்த நாடுகள் அதைக் கட்டாயம் கவனத்தில் கொள்ளும். அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமென்று எதிர்பார்க்கிறோம்.
இப்போது அந்தத் தீர்மானம் குறித்து இங்குள்ள அரச தரப்பினர்கள் பல்வேறு கருத்தைச் சொல்கிறார்கள். ஆனால் அதை இன்னும் ஐனாதிபதி சொல்லவில்லை. அதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானத்தை தூக்கி குப்பையில் போடுவதாக சொல்கிறார்கள்.
ஆனால் ஒரு பெரிய உலக நிறுவனம் குப்பை கூடையில் போடுவதற்கு தீர்மானம் இயற்றுவதில்லை. இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இப்படி பல கதைகளை இங்குள்ளவர்கள் கதைத்தாலும் நாங்கள் இதைப் பற்றி பெரிய அளவில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அது சர்வதேச தீர்மானம் என்பதால் அதற்கு சர்வதேசம் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும்.
தெற்கு இனவாதத்திற்கு தீனி போட கூடாது
இந்த நாட்டில் தற்போது தெற்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இனவாதப் பிரச்சாரங்கள் ஒன்றும் புதுசு இல்லை. இது காலத்திற்கு காலம் நடக்கிறது தான். அங்கு காலத்திற்கு காலம் பல பேர் இனவாதம் பேசுவார்கள். ஆனால் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். இந்த விடயங்களில் முக்கிய அம்சமாக இப்ப நான் பார்ப்பது இன்றைக்கு பிரதமராகவும் பொது ஐன பெரமுனவின் தலைவராகவும் மகிந்த ராஐபக்ச இருக்கிறார். ஆனால் இந்த விடயங்களில் அவர் இன்னும் மௌனம் தான் காக்கிறார்.
அதே போல கோட்டபாய ராஐபக்சவும் சிலதுகளைச் சொல்லவில்லை. ஆனால் இடையில் இருக்கிற சில்லறைகள் தான் கதைக்குதுகள். ஆனபடியால் நாங்கள் இப்பொழுது இருக்கிற அடிப்படையில் என்னுடைய பார்வையில் நாங்கள் கூடுமான வரை அவதானிக்கிற ஒரு செயற்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவசரப்பட்டு நாங்கள் எதிர்க்கருத்தக்களைச் சொல்லி அதுவே தெற்கத்தேய தீவிரவாதிகளுக்கு இனவாதிகளுக்கு மதவாதிகளுக்கு தீனி போடுவதாக அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக அமையக் கூடாது.
கடந்த ஐனாதிபதி தேர்தலில் எங்களுடைய செயற்பாடுகள் அவ்வாறு அமைந்ததாக விமர்சனம் இருக்கிறது. ஆகவே அந்த மாதிரியானதொரு நிலை இல்லாமல் தவிர்த்துக் கொண்டு அவர்களுக்குள்ளேயே ஒரு அரசியல் பிணக்கு ஏற்படுகிற வரையில் நாங்கள் பொறுமை காக்கிறது தான் இப்பொழுது இருக்கிற ஒரே வழி என்று நான் நினைக்கிறேன்.
வீட்டிலிருந்து சென்றவர்கள்வருவதற்கான கதவுகள் திறந்தே இருக்கிறது
தமிழர் தரப்பில் ஒற்றுஐமய குறித்தப் பேசுகின்ற அதே நேரத்தில் பிளவுகள் அல்லது புதிய அணிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனதான் ஆனால் நான் எப்பவுமே சொல்கிறேன் இங்கிருந்து தானே எல்லோரும் போனவர்கள்;. இவர்களில் ஒருதராவது இங்கிருந்த போகாதவர்கள் இல்லை. நான் ஏற்கனவே சொன்னது போல தந்தை செல்வா வழியில் வந்த நாங்கள் இருக்கிறோம். பின்னர் ஆயுத வழியில் வந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இங்கே இருந்தவர்கள். எல்லோரும் இங்கிருந்து தான் சென்றவர்கள்.
ஆகையினால்; தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் என்ற வகையில் நான் பொறுப்போடு இப்பவும் சொல்கிறேன் சென்றவர்களுக்கான கதவு திறந்திருக்கிறது அவர்கள் யாரும் வரலாம் என்று தான். ஆனால் அவர்கள் யாரும் வராயினம். ஏனென்றால் அவர்களுக்கு தலைமைத் தலைப்புடிப்பு இருக்கிறது. நான் தலைவன் என்ற எண்ணம் உள்ளது.
இப்போது தேர்தல் காலம் என்பதால் எங்களுக்குள்ளேயும் குடும்பு பிடிப்பு இருக்கிறது. ஆனால் அது அவர்களில் இன்னும் நிறைய கடும் குடும்புபிடிப்பு நடக்கும். ஏனென்றால் தேர்தல் தொகுதி பங்கீட்டில் அது வரும். ஆகையினால் அவர்கள் வர மாட்டார்கள். எங்களிடம் வந்தாலும் அந்தப் பிரச்சனை இருக்கத் தான் போகிறது.
வடகிழக்கில் இன்றைக்கு இருக்கின்ற 14 பாராளுமுன்ற உறுப்பினர்களும் போட்டியிடத் தான் போகின்றனர். அவர்களுக்கு கொடுக்கத் தான் வேண்டும். அப்ப மிச்சம் எங்க பங்கீடு செய்வதென்றால் போட்டி தான் இருக்கும். ஆனாலும் இதற்கெல்லாமப்பால் ஒற்றுமையை நாங்கள் வர வேற்கிறோம். எல்லாரும் வந்த சேர்ந்து ஒரு தீரமானம் எடுக்க வேண்டும். இல்லையோ நாங்கள் நாங்கள் எங்கள் தனித்துவத்தோடு தேர்தல்களில் பங்குபற்றி தேர்தல் முடிந்து ஒரு கூட்டில் நிற்கலாம் என நான் நினைக்கிறன்
இப்பவும் சொல்வது தந்தை செல்வா வழி தான் எல்லாரும் எடுத்த வழி. ஆகவே அந்த வழியில் நாங்கள் தொடர்ந்து போகலாம். இதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. பின்நாளில் யாரும் வந்து பேசி கலந்து பேசி பொது விடயங்களில் செயற்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதைச் செய்யலாம். அதைவிடுத்து இனி ஒற்றுமை ஒற்றுமை என்று கதைப்பதெல்லாம் ஊடகங்களுக்கான ஒரு கோசமாகவே தான் இருக்கும்
நாங்கள் புனிதர்கள் என்று சொல்ல விரும்பவில்லை
கூட்டமைப்பின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுத் தான் இருக்கின்றது. அந்த விமர்சனங்கள் ததேர்தல்களில் தாக்கத்தைச் செலுத்துமென்று தான் நான் நம்புகிறேன். ஆகவே இல்லையென்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை. சில சில தவறுகள் எங்களிடமும் இருக்கிறது. அதை நான் மறுதலிக்கவில்லை. அப்படி மறுதலிப்பது என்றால் நான் ஒர அரசியல் போக்கிலியாக இருக்க வேண்டும்.
ஆனால் சில சில தவிர்க்க முடியாத தவறுகளும் நடந்திருக்கிறது. அதே நேரத்தில் தவிர்க்கக் கூடியதும் தவிர்க்கப்படாமல் இருந்திருக்கிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக பார்த்து நாங்கள் சில விடயங்களிலே பிழையாக இருந்தாலும் கூட எங்களுடைய நோக்கங்கள் இலக்குகள் சரியாக இருந்திருக்கிறது. அதில் சில அனுகுமுறைகள் தவறாக இருந்திருக்கலாம்.
ஆகவே எல்லாத்தைம் மக்கள் நிறைபோட்டுப் பார்த்து எங்களோடு தான் நிற்பார்கள். ஒற்றுமையின் தேவையின் அடிப்படையில் தமிழினம் எங்களோடு நிற்கலாம். எங்கள் பிழையை ஏந்திக் கொண்டு தான் செயற்படுவார்கள். நாங்கள் பெரிய புனிதர்கள் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் மக்கள் எங்களோடு தான் நிற்பார்கள். ஏனென்றால் ஒன்றாக நிற்க வேண்டுமென்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆக அரசியல் கட்சிகள் நாங்கள் தீர்மானிப்பதல்ல. அரசியல் கட்சிகள் ஒன்றாக நில்லுங்கள் நாங்கள் உங்களுக்கு பின்னால் நிற்கிறோம் என்று சொல்லி தான் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க முடியும். ஆனால் அவற்றை ரணில் விக்கிமரசிங்க தரப்பினர்கள் செய்யவில்லை. உண்மையில் அவர் செயற்பட்டிருந்தால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்த தரப்பினர்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதனைச் செய்யாமல் டில் போட்டுச் செயற்பட்டார்.
ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கின்ற தரப்பினர்கள் தங்களுக்கு எதிராக கடந்த காலத்தில் செயற்பட்டவர்களை திட்டமிட்ட வகையில் பழிவாங்குகின்றனர். அதனடிப்படையிலையே கைதுகள் எல்லாம் நடக்கிறது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவின் கைது என்னத்திற்கு என்று தெரியவில்லை. அவரை காரணமில்லாமல் பிடித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதன் பின் அதற்கு காரணங்கள் பல மாறி மாறி கூறுகின்றார்கள். அவரிடம் அனுமதியில்லாம் துப்பாக்கி இரந்ததாக பொலிஸ் தரப்பு சொல்கிறது. அதே நேரம் அமைச்சர் ஒருவர் சொல்கிறார் தொலைபேசி உரையாடலின் அடிப்படையில் தான் கைது செய்யப்படார் என்று.
ஆகவே அவர் எப்படி இந்த உரையாடலைப்; பார்க்கலாம். அவ்வாறாயின் அவரையே முதலில் கைது செய்ய வேண்டும். ஆக இவ்வாறு அரசாங்கம் முன்னெடுக்கின்ற இத்தகைய விடயங்கள் தொடர்பில் சிங்கள மக்களும் சரியாகச் சிந்திப்பார்கள். அவர்களுடைய சிந்தனை எதிர்வரும் தேர்தல்களில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
Post a Comment