தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் தொகுதிகளில் ஒன்றான வட்டுக் கோட்டைத் தொகுயில் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக அங்குள்ள மக்களின் தேவைகள் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டார். இதன் போது அங்குள்ள மக்களுடன் பல்வேறு பிரச்சனைகள் தேவைகள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அவற்றைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிரந்தார்.
குறிப்பாக இந்த வட்டுக் கோட்டைத் தொகுதியானது அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் தொகுதி என்ற அடிப்படையிலையே கம்பரெலிய ஒதுக்கீடு உட்பட கட்சி நடவடிக்கைகள் முன்னகர்த்தப்பட்டிருந்தன.
ஆனால் தற்பொது அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சரவனபவன் ஆகியொருக்கு இடையில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தோடு பரஸ்பர குற்றச்சாட்டக்களையும் ஊடகங்கள் முன்பாக வெளிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையிலையே சரவணபவனின் தேர்தல் தொகுதியான வட்டுக் கோட்டைத் தொகுதிக்கு சுமந்தரன் சென்று மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார். மேலும் அங்கு பல இடங்களிளிலும் மக்களின் தேவைகள் பிரச்சனைகள் என்பவற்றைக் கேட்டறிந்து கொண்ட சுமந்திரன் அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
மேலும் குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையெ மறைமுகமாக நடக்கின்ற இந்தப் முரண்பாடுகள் காரணமாக சுமந்திரன் எம்;பி வட்டுக் கோட்டைக்குச் சென்றமை சரவனபவனுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment