வட மாகாண நிலையான மீன்பிடி தொடர்பில் கடற்தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் யாழில் கலந்துரையாடல் - Yarl Voice வட மாகாண நிலையான மீன்பிடி தொடர்பில் கடற்தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் யாழில் கலந்துரையாடல் - Yarl Voice

வட மாகாண நிலையான மீன்பிடி தொடர்பில் கடற்தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் யாழில் கலந்துரையாடல்

வடக்கு மாகாண நிலையான மீன்பிடிக் கைத் தொழில் தொடர்பான வட்ட மேசைக்  கலந்துரையாடலொன்று யாழ் ரில்கோ ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் இக் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் சுப்பிரமணியம், மேற்படி இணையத்தின் முன்னாள் தலைவர் ஆலம், முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சமாசத் தலைவர், யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சமாசத் தலைவர் அன்னராசா, ஆகியார் கடற்தொழிலாளர் பிரச்சனைகள் சம்மந்தமாகவும் அதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் தெரிவித்திருந்தனர்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச் சந்திரன், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவர் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன் ஆகியோரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post