யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டமைப்பு பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க தீர்மானம்? - Yarl Voice யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டமைப்பு பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க தீர்மானம்? - Yarl Voice

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை கூட்டமைப்பு பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க தீர்மானம்?

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத் தீர்மானத்துள்ளதாக தெரிய வருகிறது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாரர்ளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் நாளை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்திற்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடhக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆயினும் இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்ற அதே வேளையில் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் கலந்த கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015 ஆம் ஆண்டு முதல் அந்த அரசில் அமைச்சராக இருந்த விஐயகலா மகெஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியொரின் இணைத் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

இதே வேளை முன்னர் அமைச்சராக இருந்த காலங்களில் கூட்டத்தை தலைமை தாங்கிய நடாத்திய ஈபிடிபியின் செயலாளர் நாயகம் ஆட்சி மாற்றத்தின் பின்னராக நடைபெற்ற இக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார். 

இவ்வாறான நிலையில் தற்பொது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக அங்கஐன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார். 

இதற்கமைய மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. இந்தக் நிலையிலையே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post