யாழ் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்இ
தான் ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள ராணுவத்தினரை விடுவிப்போம் என தேர்தல் காலத்தில் கூறியிருந்தார்.அதேபோல் அண்மையில் 34 ராணுவ அதிகாரிகளை சிறையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை பெற்ற சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ அதிகாரியை மன்னிப்பில் விடுதலை செய்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எமக்கு அதிர்ச்சியை தரவில்லை. ஏனெனில் சிங்களத் தலைவர்களின் மனநிலையில் எப்பபோதும் மாற்றம் ஏற்படாது.இதனை நாம் ஆரமப்த்தில் இருந்தே கூறி வருகின்றோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா காலம் தொடக்கம் கோத்தபாயவின் இந்த அரசு வரை தமிழ் மக்கள் மீதான மனோ நிலையில் மாற்றம் எவையும் ஏற்படவில்லை.ஏற்படப்போவதும் இல்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விற்கும் மஹிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் விரோதம் இருந்தாலும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ராணுவத்தை பாதுகாக்க வேண்டுமென்ற செயற்பட்டனர்.தற்போது கோத்தபாய ராஜபக்ஷவும் அதன் தொடர்ச்சியாக சிறையில் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினரை விடுதலை செய்துள்ளார். இந்த செயற்பாடானது தமிழர்களை படுகொலை செய்பவர்களை நாம் விடுதலை செய்வோம் என்ற செய்தியை ராணுவத்திற்கு வழங்கியுள்ளது.இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் போராடி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த காலங்களைப் போன்று வன்முறையைப் பிரயோகிக்க இந்த அரசாங்கமும் ராணுவமும் எத்தனித்து வருகின்றது. இதனாலேயே நாம் உள்ளக விசாரணையில் எமக்கு நீதி கிடைக்காது என்பதை கூறுவதுடன் சர்வதேச விசாரணை ஊடாக நாம் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரி வருகின்றோம்
உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை சர்வதேச விசாரணையே வேண்டும் என நாம் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜா சுமந்திரன் ஆகியோர் 2013ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கை உள்ளது.எனக் கூறி கால அவகாசம் வழங்கி அவர்களை தொடர்ச்சியாக இலங்கையை சர்வதேசத்திடம் இருந்து காப்பாற்றி வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் போட்ட பிச்சையினாலேயே தற்போது கோத்தபாய ஜனாதிபதியாகியுள்ளார்.ஏனெனில் சர்வதேச விசாரணை வேண்டாம் உள்ளக விசாரணையே வேண்டும் அதில் நமபிக்கை உள்ளது.என பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாயவை காப்பாற்றியதன் விளைவே தற்போது கோத்தபாய மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார்.
ராணுவத்தினரை விடுதலை செய்து வரும் இந்த அரசாங்கமும் கடந்தகால அரசாங்கத்தை போன்ற செயற்பட்டு வருகின்றது சந்திரிக்கா காலத்திலிருந்து கோத்தபாய ஆட்சி வரை அரசியல் கைதிகள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கொண்டதாக இல்லை நாம் எமக்கான நீதியை சர்வதேசத்தினை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.என்றார்.
Post a Comment