வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக இன்று தனது கடமைகளைப் பெறுப்பேற்ற சாள்ஸ் - Yarl Voice வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக இன்று தனது கடமைகளைப் பெறுப்பேற்ற சாள்ஸ் - Yarl Voice

வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக இன்று தனது கடமைகளைப் பெறுப்பேற்ற சாள்ஸ்


வடமாகாணத்தின் 1வது பெண் ஆளுநராக திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் இன்று பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வட மாகாண ஆளுநராக கடந்த திங்கள் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர் பதவியைப் பொறுப்பேற்றார்.

இன்றைய நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள், மற்றும் இராணுவம், பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையினையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.





0/Post a Comment/Comments

Previous Post Next Post