தெற்கில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இனவாதப் போக்கிலேயே செயற்படுகின்றனர் - சுரேஸ்பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice தெற்கில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இனவாதப் போக்கிலேயே செயற்படுகின்றனர் - சுரேஸ்பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice

தெற்கில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இனவாதப் போக்கிலேயே செயற்படுகின்றனர் - சுரேஸ்பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு


தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் வடக்கு மாகாண நிலையான மீன்பிடிக் கைத் தொழில் தொடர்பான வட்ட மேசைக்  கலந்துரையாடலொன்று யாழ் ரில்கோ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றுகையிலையே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

இந்திய இழுவைப்படகுகளின் நடவடிக்கைகள், தென்னிலங்கையில் இருந்து இங்கு வரக் கூடிய மீனவர்களின் நடவடிக்கைகள் இந்த இரண்டு தரப்பினர்களும் செய்யக் கூடிய சட்டவிரோத மின்படி முறைகள் மற்றும் உள்ளுர் மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் இவை அனைத்தும் மீனவர்களின் அன்றாட தொழிலை பாதிக்கப்படுகின்றது.

இதனால் எமது கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றதையே இங்கு பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 1983 களில் இலங்கையின் 40 வீதமான மீன்பிடிகளை வடக்கு வாமாகணம் அனுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் யுத்தத்திற்குப் பிற்பாடு அந்த நிலைக்கு இன்னும் வளரவில்லை.

இங்கு முக்கியமாக நாங்கள் பார்க்க வேண்டிய விசயமென்னவெனில் முல்லைத்தீவில் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல்கள் தான். அவர்கள் பருவகாலம் என்று சொல்லிக் கொண்டு நிரந்தரமாக வந்து தங்கி இருக்கின்ற விடயம் மீனவர்கள் மத்தியில் பெரும் பிரச்சனைகயாக இருக்கிறது.

இது பற்றி நாங்கள் பாராளுமன்றத்திலோ அல்லது பொது வெளியிலோ பேச வெளிக்கிடுகின்ற பொழுது அரசாங்கத்தால் அல்லது சிங்கள அமைச்சர்களால் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களால் இது ஒரு இனவாதக் கண்கொண்டு தமிழர்கள் நடக்கின்றார்கள் என்றதொரு கருத்து பரப்பப்படுகின்றது.

இந்தியாவில் கூட நாங்கள் பார்த்தோமேயானால் தமிழ் நாட்டக் கடலில் தமிழர்கள் தான் மீன்பிடிக்கின்றார்கள். அவர்கள் ஆந்திரக் கடலுக்குப் போனால் அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். அல்லது கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் வடக்கு மாகாணக் கடலுக்குள் தென்னிலங்கை மீனவர்கள் வந்து சர்வசாதாரணமாக மீன்பிடிக்கின்ற சூழ்நிலையும் அல்லது கரைவiலை இழுக்கக் கூடிய இடங்களை பலாத்காரமாக கைப்பற்றுகின்ற நிலைமையும் அதற்கு மேலதிகமாக சகலவிதமான சட்டவிரோதமான மீன்பிடி முறைகளைப் பாவிக்கின்ற நிலையும் இருக்கிறது.

இவ்வாறாக தென்னிலங்கை மீனவர்கள் மேற்கொள்கின்ற சட்டவிரோத அத்துமீறல் நடவடிக்கைகiளுக்கு கடற்படையினர், பொலிஸார், அரசாங்கத்தினர் என அவர்கள் அனைவரும் ஒத்துழைப்பாக இருக்கின்றனர். அவ்வாறு சகலரதும் ஒத்துழைப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் துணிச்சலுடன் இவர்கள் இந்த தொழிலைச் செய்யக் கூடியதாக இருக்கின்றது.

ஆக சட்டங்கள் தென்னிலங்கையில் ஒருவிதமாகவும் வடக்கு கிழக்கில் இன்னொருவிதமாகவும் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது தான் உண்மை. இங்கு கடற்தொழில் அதிகாரிகள் இருக்கக் கூடும். ஆகவே அந்த அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசாங்கத்தின் கீழ் வருபவர்களாகத் தான் இருக்கின்றனர். அவர்களுக்கும் மாகாணத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

ஆகையினால் மாகாண அமைச்சரோ மாகாண முதலமைச்சரோ அவர்களுக்கு ஊடாக எதனையும் செய்விக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் கடற்தொழிலாளர்களுடைய குடும்பங்கள் இருக்கிறது. அதாவது பத்து இலட்சம் மக்கள் இருக்கக் கூடிய வடக்கில் இரண்டு இலட்சம் கடற்தொழிலாளர்கள் இருப்பதாக இருந்தால் அந்தக் கடற்தொழில் என்பது ஒரு மாகாணத்திற்கு உரித்தான அதிகாரமாக முழுமையாக மாற்றப்பட வேண்டும்.

ஆப்பொழுது தான் தாங்களாக தாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் தாங்கள் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியதாக இருக்கும். இன்று கொழும்பில் இருந்து அனுமதி கொடுத்து முல்லைத்தீவு உட்பட வடக்கு மாகாணத்திற்கு அனுப்புவது தான் நடக்கிறது. ஆனால் அந்த அதிகாரம் என்பது வடக்கு மாகாணத்திற்கு இருக்குமாக இரந்தால் அந்த நிலவரங்கள் இருக்க முடியாது.

ஆகவே வடக்கு மாகாணத்தில் தெற்கிலிருந்து வந்து ஊடுருவது கொள்ளையடிப்பது என்பது தொடர்பாக தெற்கில் எவ்வளவு தூரம் விழிப்புணர்வு இருக்கிறது என்பது தான் இங்கிருக்கின்ற கேள்வி. இவற்றைப்பற்றி நாங்கள் கதைத்தால் அது இனவாதமாக மாற்றப்படுபடுகிறது. ஆகவே இது இனவாதம் அல்ல. இரண்டு இலட்சம் கடற்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனை என்பதை எவ்வாறு அரசாங்கத்திற்குச் சொல்லப் போகிறொம். சுpங்கள மக்களுக்குச் சொல்லப் போகின்றொம் என்றொரு விசயம் இரக்கின்றது.

இங்கு ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, பொதுஐன பெரமுன ஆகிய கட்சிகளின் ஆட்சியிலம் அதே பிரச்சனைகள் தான் இருக்கின்றன. ஆகவே எந்த ஆட்சி வந்தாலும் இந்தப் பிரச்சனைகளுக்கு மாற்றமில்லை. அவர்கள் தங்களுக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்து அதன் பிரகாரம் தான் அவர்கள் செயற்படுகின்றார்கள். ஆகவே பாராளுமன்றத்தில் நாங்கள் பேசிவிட்டுப் போவதால் கடிதம் எழுதி அனுப்புவதால் மாகாண சபையில் பேசுவதால் பிரச்சனை தீர்ந்துவிடாது.

இதற்கு அரசாங்கம் திட்டவட்டமாக இங்கிருக்கிருக்கக் கூடிய சட்டம் ஒழுங்குகளை நிறைவேற்றக் கூடியவர்களை சிறப்பாக செயற்பட வைக்க வேண்டுமென்று சொன்னால் அரசாங்கம் சட்டம் ஒழுங்கைக் கவனிப்பவர்களுக்கு சரியான பலத்தைக் கொடுக்க வேண்டும். அவர்கள் ஒரு இனவாதத்தடன் செயற்படுகின்ற சூழல் இரக்கக் கூடாது. இங்கிருக்கக் கூடிய கடற்தொழிலாளர்கள் செய்யக் கூடியதற்கான அதிகாரங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான நிலைமைகள் இங்கில்லை என்பது யதார்த்தமானது.

ஆகவே சட்டவிரோதமான தொழிலை அல்லது ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டுமென்றால் ஒட்டுமொத்தமான மினவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அவ்வாறு ஒட்டுமொத்த மீனவர்களும் ஒரு வாரத்திற்கோ ஒரு மாதத்திற்கொ கடலுக்குப் பொக மாட்டோம் என்று சொன்னால் இந்த அரசாங்கம் அதற்குப் பின்பும் அதனைச் செய்யுமாக இருந்தால் நிச்சயமாக அதனைக் கேள்வி கேட்பதற்கு சர்வதேச சமூகமோ அல்லது அயல் நாடுகளோ அல்லது மனித உரிமைகள் பற்றி பேசக் கூடியவர்களோ பல பேர் முன்வரலாம்.

ஆகவே நாங்கள் இதுவொரு சாதாரண பிரச்சனை மாதிரி அரச அதிபரோ அபிவிருத்திக் குழுவொ இதனைத் தீர்த்துவிடுமென்று சொல்ல முடியாது. இன்றைக்கு ஒரு தமிழ் அமைச்சர் வந்திருந்தாலும் அவராலும் கூட எடுத்த எடுப்பில் இதனை சாதாரணமாகச் செய்துவிட முடியாது. இந்த விடயத்தில் தமிழ் அமைச்சராக இருக்கின்றவர் ஒரு காத்திரமான நடவடிக்கையை எடுத்தாலும் கூட அமைச்சரவையோ ஐனாதிபதியோ ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது யதார்த்தமான உண்மை.

ஆவ்வாறான சூழ்நிலையில் எமது பிரச்சனைகளை நாங்கள் தீர்க்க வேண்டுமென்ற தேவை தான் இரக்கின்றது. அகவே இதில் முக்கியமானது இங்கு சங்கங்கள் சமாசங்கள் இணையங்கள் இருக்கின்ற போது ஏனைய அனைவரும் ஒத்துழைப்பாக இருப்பதன் மூலமாகத் தான் இதனைச் சாதிக்க முடியும்.

இலங்கை என்பது சிங்கள தமிழ் சமூகங்கள் என்பது நிச்சயமாக இரண்டுபட்ட நிலையில் இருக்கின்றதென்பது யதார்த்தமானது. ஏவ்வளவு தான் புரிந்துணர்வைப் பற்றி அவர்கள் பேசினாலும் நடைறையில் செய்வது முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பும் அவமதிப்பும் அல்லது அடக்குமறைகளும் என தாங்கள் என்ன செய்ய முடியுமோ அவை அத்தனையையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் ஒன்றில் அதிகாரங்கள் எங்கள் கைகளுக்கு வர வேண்டும். அதனூடாகத் தான் நாங்கள் எங்களுக்கான கொள்கைகளைக் கூட நாங்கள் வகுக்க முடியும். ஆக முதலாவது அதிகாரங்கள் வர வேண்டுமென்பதற்கு அப்பால் இப்பொது நடைபெறக் கூடிய தென்னிலங்கை மினவர்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நாம் அனைவரும் சேர்ந்து காத்திரமான முடிவிற்கு வரவேண்டும்.

ஆக தெற்கிலிருந்து வருவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் செய்கின்ற சட்டவிரோத தொழில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் தான் இங்கிருக்கக் கூடியவர்கள் செய்கின்ற சட்டவிரோத தொழிலைக் கட்டுப்படுத்த முடியும். ஆகவே எதிர்காலத்தை நாங்கள் எவ்வாறு திட்டமிடுவது இந்தப் பிரச்சனைகளை நாங்கள் எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது தொடர்பில் அனைவரும் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.


;.

0/Post a Comment/Comments

Previous Post Next Post