சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தில் அனைவரின் மனங்களிலும இல்லங்களிலும் மகிழ்ச்சி நிறையட்டும் என்று கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள தைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது -
சூரிய ஒளி உலக மக்களுக்கு நிலையானதைப் போல் எமது மக்களுக்கு நாம் காட்டும் அரசியல் வழி முறைகளும் தீரக்கதரிசனமானவையாகும்.
நாம் எமது மக்களுக்கு அழிவுகளற்றதும்இ அபிவிருத்தியுடன் கூடிய சமத்துவமான வாழ்வுக்கானதுமான பாதையையே காட்டி வருகின்றோம். ஆனால் பெரும்பாலனவர்கள் தொடர்ந்தும் தவறான பாதையில் பயணித்து தோல்விகளையே சந்தித்து வருகின்றனர்.
சுயலாப அரசியல் கபடதாரிகளின் தவறான வழிகாட்டலை நம்பி அவர்களைப் பின் தொடர்ந்து அரசியல் மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை பெற்றுக் கொள்ளாமல் தோல்விகளையும் பின்னடைவுகளையுமே பெற்றுக் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலைமைகளை மாற்றி அமைத்து எதிர்காலத்திலேனும் நாம் காட்டி நிற்கும் சரியான திசையில் எம்மோடு கரம் கோர்த்து முன்னோக்கிப் பயணிக்க எமது மக்கள் முன்வர வேண்டும் என்பதுடன் அதற்கான மனமாற்றம் ஏற்பட வேண்டும்.
கடந்த கால அனுபவங்கள் ஏமாற்றங்களிலிருந்து நம்பிக்கையுடன்கூடிய எதிர்காலத்துக்கான மன மாற்றம் ஏற்பட்டு எமது மக்கள் எம்மை பலமடையச் செய்து ஓரணியாக பயணிப்பார்களேயானால் தைத்திருநாள் தரும் மகிழ்ச்சியானது நிரந்தர மகிழ்ச்சியாக அமையும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment