சிறுவர் பூங்கா விளையாட்டு மைதானம் மற்றும் சுகாதார வசதிகள் மேம்பாட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட நீர்த்தாங்கி நீர்விநியோக திட்டம் போன்றவை மாணவர் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் - யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சோ சேனாதிராசா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினராக யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் யாழ் மாநகர பிரதி முதல்வர் து. ஈசன் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment