வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தாளையடிப் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மது வரித் திணைக்களத்திற்கு கிடைதத இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை சாவகச்செரி மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன் போது வீட்டிறிருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்ட அதே நேரத்தில் குறித்த வீட்டிருந்த சந்தேக நபர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டள்ளதுடன் ஏனையவர்கள் தப்பியொடியுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பதுக்கி வைத்திருந்த நிலையில் மீட்ப்பட்ட 18 கிலே கஞ்சாவையும் நாளை திங்கட் கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை எடுதது வருவதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment