காணாமல் போனோர் தொடர்பில் ஐனாதிபதியின் கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு - Yarl Voice காணாமல் போனோர் தொடர்பில் ஐனாதிபதியின் கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு - Yarl Voice

காணாமல் போனோர் தொடர்பில் ஐனாதிபதியின் கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு

இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்கள் இறந்து விட்டதாக ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச தெரிவித்த கருத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் போரின் இறுதி கட்டங்களில் காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் இராணுவத்திடம் சரணடைந்தனர்இ எனவே பொறுப்புக்கூறலும் நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இறுதிப்போரின்போது பலர் இராணுவத்தில் சரணடைந்ததற்கான சான்றுகள் உள்ளன என்றும் இது வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை போர்க்குற்ற விவகாரங்களுக்கு எதிர்வரும் ஜெனிவா அமர்வில் முறையான தீர்வொன்று கிடைக்கப்படாவிட்டால் உலகில் நிராகரிக்கப்பட்ட இனமான தமிழினம் மாற்றமடையும் என்றும் அவர் கூறினார்.

காணாமல்போனவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாகவும் அவர்களில் பெரும்பாலோர் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர் அல்லது கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டடனர் என கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கருடனான சந்திப்பில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

மேலும் காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தனது திட்டங்களையும் கூறிய ஜனாதிபதி அவர்கள் தொடர்பாக தேவையான விசாரணைகள் முடிந்ததும் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post