ஐனாதிபதி கோட்டாவின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள் - அமைச்சர் பந்துல தகவல் - Yarl Voice ஐனாதிபதி கோட்டாவின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள் - அமைச்சர் பந்துல தகவல் - Yarl Voice

ஐனாதிபதி கோட்டாவின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள் - அமைச்சர் பந்துல தகவல்



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட அவர்

'இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாமை பெரிய குறைப்பாடலல்ல. தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு ஜனாதிபதி அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரை ஈடுப்படுத்தியுள்ளார்.

எமது அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்இ அதற்கான தேவையும் காணப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு தொடர்பில் முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஜனாதிபதிஇ பிரதமர்இ பாதுகாப்பு செயலாளர்இ மற்றும் பாதுகாப்பு பிரதானிகள் மாத்திரமே கலந்துக் கொள்வார்கள்.

பாதுகாப்பு சபை கூட்டத்தின் இரகசிய தீர்மானங்கள் பகிரங்கப்படுத்தப்படாது. அதற்கான நடவடிக்கைகள் மாத்திரமே முறையாக மேற்கொள்ளப்படும். கிடைக்கப் பெற்ற புலனாய்வு தகவல்களை கொண்டு ஜனாதிபதி பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளார். இது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம்.

பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படாத விடயத்தை எதிர் தரப்பினர் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கின்றார்கள். கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சர்இ இராஜாங்க அமைச்சர்இ பாதுகாப்பு செயலாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தும். முன்னறிவித்தல் விடுக்கப்பட்ட ஏப்ரல் 21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலை தவிர்க்க முடியவில்லை.

தேசிய பாதுகாப்பு விடயங்கள் அரசியல் தேவைகளுக்கா பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

இதன் காரணமாகவே பாரிய விளைவு ஏற்பட்டன இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்க முடியாது.நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டே ஜனாதிபதி பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கின்றார். பாதுகாப்பு சபையின் தீர்மாங்களை கேள்விக்குற்படுத்த முடியாது' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post