சமீபத்தில் குழந்தை பெற்ற நடிகை எமி ஜாக்சன் மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்.
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார். கடந்த செப்டம்பர் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
தற்போது மீண்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் புகைப்படம் ஒன்றை தற்போது பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
Post a Comment