கிளிநொச்சியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய சுமந்திரன் - Yarl Voice கிளிநொச்சியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய சுமந்திரன் - Yarl Voice

கிளிநொச்சியில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது கிளிநொச்சி மாவட்ட திருச்சபை ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்ததுடன் சமகால நிலைமைகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

அதே போன்று சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்திற்குள் சென்று பாடசாலையிலுள்ள பிரச்சனைகள் தேவைகள் தொடர்பிலும் பாடசாலை அதிபருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

இவ்வாறு பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடடி பிரச்சனைகள் தேவைகள் தொடர்ந்பில் கேட்டறிந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இந்த விஐயத்தின் போது அவரது கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0/Post a Comment/Comments

Previous Post Next Post