பற்றாக்குறைகள் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதை விட இருப்பதை பயன்படுத்தி மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் சிந்திக்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வட மாகாண திணைக்களங்கள் சிலவற்றுடன் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் திணைக்களங்கள் மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களம் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்இ கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான திணைக்களங்களும்இ அமைப்புக்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
குறித்த சந்திப்புக்களின் போது திணைக்களங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்போது கருத்துரைத்த வடக்குமாகாண ஆளுநர்இ அனைவர் மத்தியிலும் சமூக அக்கறை மேம்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுயமாக நம்மை நாமே முன்னேற்ற வேண்டும். எம்மால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் எப்பொழுதும் மற்றவர்கள் மீது பழி போடுவதிலேயே காலம் செல்கிறது.
இந்த நிலை தொடராமல் இனம்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வை விரைவாக அடையாளம் கண்டுஇ மக்களுக்கு உதவ அனைவரும் தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கோரியுள்ளார்.
Post a Comment