ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒன்றறை மணித்தியாலயம் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எதிர்வரும் நாட்களில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி மற்றும் பொதுத் தேர்தல் குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
Post a Comment