ஐக்கிய தேசிய முன்னணி அரசின் ஆட்சிக் காலத்தில் தான் வடக்கு மாகாண பாடசாலைகள் அபிவிருத்தி அடைந்ததாக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
சாவகச்சேரி கெற்பேலி அகதிகள் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவந்த அரசாங்கமானது அதன் பின்னர் வடக்கு மக்களின் அபிவிருத்தி தொடர்பில் கரிசனை காட்டாது வடக்கு மக்களை புறந்தள்ளியே வந்தது.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலமே வடக்கு மாகாண பாடசாலைகள் அபிவிருத்தி அடைந்தன.
அதிலும் மைதானங்கள் கட்டிடங்கள் போன்றன வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் மூலம் அந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
பெருமளவான நிதியானது கல்விக்கு ஒதுக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை முன்னேற்றுவதற்கு கடந்தநல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்
Post a Comment