தியாகி திலீபனின் நினைவு தினத்துற்கு நீர் வழங்கியமை தொடர்பில் ரி.ஐ.டி விசாரணை
தியாகி திலீபனின் நினைவு தினத்தின்போது நிகழ்வு இடம்பெற்ற சமயம் மாநகர சபையின் சின்னம் பொறிக்கப்பட்ட நீர்த்தாங்கி யாரின் அனுமதுயின் பெயரில் சென்றது என பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணையுல் ஈடுபட்டுள்ளனர்.
2019-09-26 அன்று நல்லூர் பின் வீதியில் தியாகி திலீபனின் நினைவுத் தூபி முன்பாக பகல்வேளை நிகழ்வுகள் இடம்பெற்றது. இதன்போது யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான ஓர் நீர்த்தாங்கி அப் பகுதியில் கானப்பட்ட வெப்பநிலையை கருத்தில்கொண்டு நீர் விசிறியிருந்தது.
இவ்வாறு விசிறப் பயன்படுத்தப்பட்ட நீர்த் தாங்கியில் மாநகர சபைக்கு உரிய இலட்சணை கானப்படுகின்றது. அவ்வாறு கானப்பட்ட வாகனம் எவரது அனுமதியின் பெயரில் குறித்த நிகழ்விற்கு பயன் படுத்தப்பட்டது என மாநகர ஆணையாளரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது எழுத்தில் கோரியுள்ளனர்.
மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் இடம்பெறும் எந்த நிகழ்விற்கும் நீர் கோரி சபையில் பதிவு செய்யப்பட்டால் நீர் வழங்குவது சபையின் பணிகளில் ஒன்றானது என்பதுடன் மாநகர சபையில் தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட சபை இயங்கும் நிலையில் ஆணையாளர் அன்றி மாநகர முதல்வரின் பணிப்பின் பெயரிலும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்க நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவ்வாறான நிலமை ஏற்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment