புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதார வளத்தை பயன்படுத்தி வடக்கை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் - வடக்கு ஆளுநர் சாள்ஸ் - Yarl Voice புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதார வளத்தை பயன்படுத்தி வடக்கை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் - வடக்கு ஆளுநர் சாள்ஸ் - Yarl Voice

புலம்பெயர் தமிழ் மக்களின் பொருளாதார வளத்தை பயன்படுத்தி வடக்கை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் - வடக்கு ஆளுநர் சாள்ஸ்

இலங்கையில் வாழும் தமிழர்கள் பல துறைகளில் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தனர் குறிப்பாக கப்பலோட்டிய தமிழர்கள் என்று பெருமையாக கூறப்பட்ட தமிழர்கள் இன்று படகுகளில் ஈழ அகதிகளாக புலம்பெயர் நாடுகளுக்கு செல்லுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சால்ர்ச் போரால் துவண்டு போயுள்ள வடக்கின் பொருளாதாரத்தை துரிதகதியில் வளர்ச்சி அடைய வைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வர்த்தகத்துறை கண்காட்சி ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்இ

இலங்கையில் போர் நடந்தபோது வடக்கு மாகாணம் அரசினாலும் வெளிநாடுகளினதும் உதவிகள்  துண்டிக்கப்பட்ட மாகாணமாக இருந்தது.அன்றைய காலத்தில் வர்த்தக உறவுகள் மிகப்பெரும் பின்னடைவில் இருந்தது .எனினும் ஆரம்ப காலங்களில் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் கப்பலோட்டிய தமிழர்கள் என்று வரலாற்று ரீதியாக கூறக்கூடிய வகையில் வர்த்தகத் துறையில் வளர்ச்சி அடைந்திருந்தனர்.

குறிப்பாக மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கப்பல் ஓடி தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்

கப்பலோட்டிய தமிழர்கள் என்ற பாரம்பரிய வரலாற்றை கொண்ட தமிழர்கள் இன்று படகுகளில் ஈல அகதிகளாக வெளிநாடுகளுக்குச் செல்கின்ற துர்ப்பாக்கிய நிலைகள் காணப்படுகின்றன.

வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த ஏராளமான தமிழர்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கனடா ஐரோப்பிய நாடுகள் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் எமது புலம்பெயர் மக்களின் பங்களிப்பு அளப்பரியதாக காணப்படுகின்றது

புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது தமிழ் மக்களின் மனிதவளம் பொருளாதார பலம் ஆகியன அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது.

அந்த மனித வளம் பொருளாதார வளம் எமது நாட்டிற்கு குறிப்பாக வடக்கு மாகாணத்திற்கு தற்போது தேவையான ஒன்றாக காணப்படுகின்றது அவர்களின் மனித வளங்கள் பொருளாதார வளங்கள் வடக்கு மாகாணத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் அப்போதுதான் நாம் போரால் துவண்டு போய் இருக்கும் வடக்கு மாகாணத்தை துரிதகதியில் மீளக் கட்டியெழுப்புவதற்கு உதவியாக இருக்கும்.

புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் வடக்கில் தங்களின் பொருளாதார வளத்தையும் மனித வளத்தையும் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இந்த கண்காட்சியும் ஒர் சந்தர்ப்பமாக அமைகின்றது என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post