குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இளைஞர்கள் மற்றும் மக்களை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி ஹவுராவில் உள்ள பெலுர் மடத்தில் நடந்த விவேகானந்தர் ஜெயந்தி விழாவில் உரையாற்றினார்.
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்இ குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமை தருவதற்கே பறிப்பதற்கு அல்ல என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்னர் மகாத்மா காந்தி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா குடியுரிமை வழங்கும் என நம்பினார்கள்.
அதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் சிலர் அரசியல் விளையாட்டிற்காக அதை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இளைஞர்களும் மக்களும் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும் குடியுரிமை சட்டம் குறித்து புரிந்துகொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment