சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் 'மஹா' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் 'மஹா'. யு.ஆர்.ஜமீல் இயக்கி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு பைலட் தோற்றத்தில் இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Post a Comment