ஐனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கை கொடுப்பனவாக இல்லை. பேரினவாதப் போக்கோடு செயற்படுகிறது அரசாங்கம் - சுமந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice ஐனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கை கொடுப்பனவாக இல்லை. பேரினவாதப் போக்கோடு செயற்படுகிறது அரசாங்கம் - சுமந்திரன் குற்றச்சாட்டு - Yarl Voice

ஐனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கை கொடுப்பனவாக இல்லை. பேரினவாதப் போக்கோடு செயற்படுகிறது அரசாங்கம் - சுமந்திரன் குற்றச்சாட்டு

நாடு முன்னேற வேண்டுமாக இருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அவ்வாறானதொரு தீர்வை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் அரசாங்கம் பேச வேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் ஐனாதிபதிக்கும் தெரியப்படுத்தியிருக்கிறோம். ஆனாலும் இந்த அரசாங்கம்  பேரினவாதப் போக்கோடு தான்  செயற்படுகிறது. ஐனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கை கொடுப்பனவாக இல்லை.


இவ்வாறு தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியன் செயற்பாடுகள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு முக்கியமானதாரு விடயத்தை நாங்கள் சொல்லியிருக்கிறோம். அதாவது கடந்த ஐனாதிபதித் தேர்தலில் ஐனாபதிக்கு வாக்களித்தவர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது சிங்கள பௌத்தர்கள் மட்டுமே வாக்களித்திருக்கின்றனர். மற்றைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. 

ஆகையினால் அதில் பெரிய முக்கியமான விடயமொன்று அடங்கியிருக்கிறது. அதாவது எந்த சிறுபான்மை சமூகமும் அவரில் நம்பிக்கை வைக்கத் தயாராக இருந்திருக்கவில்லை. தமிழ் மக்கள் சம்மந்தமாக இந்த நாட்டிலே என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதென்பது ஐனாதிபதிக்கு நன்றாகவே தெரிந்த விசயம். 

ஆனபடியினால் தான் அவர் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து பல தடவைகள் எங்களுடைய விடயங்களைச் அவருக்கு சொல்லி வந்திருக்கிறோம். அதாவது அவருக்கு சிங்கள பௌத்த மக்கள் வாக்களித்திருந்தாலும் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் தங்களுடைய பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் தான் தெரிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள். 

ஆகiயினாலே இந்த நாடு முன்னேற வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சனை சரியான முறையில் அனுகப்பட வேண்டுமாக இருந்தால் ஐனாதிபதி முதலிலே தமிழ் மக்களின் பிரதிநிதிகளோடு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும். இதை நாங்கள் அவருக்குச் சொல்லியிருக்கின்றோம். அவர் பாராளுமன்றத்திற்கு வந்த நாள் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா நேரடியாகவும் அவருக்கு இதனைச் சொல்லியிருந்தார். 

அதற்கு நிச்சயமாக உங்களுடன் பேசுவோம் என்று ஐனாதிபதியும் சொல்லியிருக்கின்றார். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அரசாங்கம் அதற்கான நடவடிக்கை எடுக்கிற போது தான் நாங்கள் அடுத்த அடுத்த எங்களுடைய நகர்வுகளைச் செய்வோம். 

தற்போது மிக முக்கியமான பாராளுமன்றத் தேர்தலொன்று வர இருக்கிறது. அந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே தமிழ் மக்களுடைய பலம் சரியான விதத்திலே பதிவு செய்யப்பட வேண்டும். எங்களுடைய பலத்தை நாங்கள் தொடர்ந்து காண்பித்தால் தான் நாங்கள் எதிலும் முன்னேற முடியும். 

ஆகையினால் தான் எங்களைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலிலே மக்களுடைய ஆணையை மீண்டும் நாங்கள் பெற்றுக் கொள்வது சம்மந்தமாக எங்களுடைய நகர்வுகளை செய்து கொண்டிருக்கிறோம். 

மேலும் ஐனாதிபதி கோட்டபாய தலைமையிலான இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் அவர்கள் பேரினவாதப் போக்கோடு தான் செயற்படுகிறார்கள் என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். ஐனாதிபதி வழங்கும் நியமனங்கள் அவரது அனுகுமுறைகள் எங்களுக்கு நம்பிக்கை கொடுப்பனவாக இருக்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்லுகிற உறுதிமொழிகள் சரியான திசையிலே காணப்படுகின்றன. அதே நேரம் செய்கைகள் மறு திசையில் இருக்கின்றன. 

ஆகையினாலே இந்த சில மாதங்களில் இப்படியாகத் தான் ஆட்சி இருக்கப் போகின்றது என்று நாங்கள் தீர்மானமாகச் சொல்ல முடியாது. எனவே பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் எப்படியான நகரவுகள் இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கலாம்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post