நீண்டகால பிரச்சினையாக இருக்கின்ற தமிழர்களுடைய பிரச்சினையை பௌத்த துறவிகள் மனப்பூர்வமாக தீர்த்துவைக்க முன்வரவேண்டும் என பௌத்த துறவிகள் முன்பு சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பௌத்த சமயத்துக்கும் இந்து சமயத்துக்கும் அன்னியோன்னியமான தொடர்பு இருப்பதை யாரும் எழிதில் பிரித்துவிட முடியாது.
பௌத்த மதத்தை சார்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரும் போது சைவ ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி தொடக்கம் திருக்கேதீஸ்வரம் நகுலேஸ்வரம் மற்றும் நயினாதிவு நாகபூசனி அம்மன் அனைத்தையும் தவறவிடாமல் வழிபடுவதை கண்டு மிகுந்த ஆனந்தமடைகின்றோம்.
யாழ்ப்பாணம் நாக விகாரையில் இருக்கின்ற சுவாமிகள் எல்லா மதத்தவர்களையும் குறிப்பாக இந்து மதத்தவர்களை அன்னியோன்னியமாக பழகி வருவது எங்களுக்கு மகிழ்ச்சி தருகின்றது.
உங்கள் அனைவருக்கும் தெரியும் எங்களுடைய மண்ணிலே எங்கள் சமூகத்தினுடைய குறிப்பாக தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்னும் சரியாக தீர்த்து வைத்துவைக்கப்படவில்லை.
நீங்கள் நினைத்தால் தர்மத்தின் வளியில் சத்தியத்தின் வளியில் எல்லா மக்களும் நிம்மதியாக வாழ்வதற்கு நீண்டகால பிரச்சினையாக இருக்கின்ற தமிழர்களுடைய பிரச்சினையை இந்த பௌத்த துறவிகள் மனப்பூர்வமாக தீர்த்துவைக்க முன்வரவேண்டும் என அன்பாக வேண்டிக் கோள்கின்றேன்.
சைவ மக்கள் இன்றைக்கும் பௌத்த மதத்தை மதிப்பவர்கள்.பல தமிழர்கள் பௌத்த மதத்தை தளுவி வாழ்ந்து இருக்கின்றார்கள்.
கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட விகாரை தமிழ் மக்கள் வழிபாடு செய்த விகாரை. பௌத்த மதத்தவர்கள் சிவன் கோவில்களை மிக முக்கியமாக வழிபாடு செய்கின்ற வழக்கம் இன்றுவரை இருக்கின்றது.
கதிர்காமக் கந்தனை நீங்கள் எல்லோரும் வழிபாடு செய்கின்றீர்கள். சில மனிதர்கள் தங்கள் தேவைக்காக எங்களையும் உங்களையும் பிரித்து விட்டார்கள்.
நாங்கள் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உங்களால் ஆன முயற்சியை செய்யுங்கள்.ஆதி மதங்களாகிய பௌத்தமும் சைவமும் இந்த நாட்டிலே சிறப்பாக காப்பாற்றப்பட வேண்டும்.
மன்னார் மாதோட்ட திருக்கேதீஸ்வர திருத்தலம் இதிகாச காலத்து கோயில். இப்போது அத்த கோயில் சுற்றாரலிலே கோயிலுக்குரிய பகுதியிலே ஒரு வளைவை கட்ட முடியாமல் நாங்கள் வருந்துகின்றோம்.
திருக்கோணேஸ்வரம் கோயில் திருப்பணிகளை சரியாக செய்ய முடியாமல் நாங்கள் கஸ்டடுகின்றோம். அன்புக்குரிய பௌத்த பெரியோர்களே இந்த திருப்பணிகள் ஆதிசமயமாக இருக்கின்ற இந்த சமயங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற கஸ்டங்களை நீங்கள் போக்கவேண்டும்.
கண்டியிலிருந்து அஸ்கிரிய பீட சுவாமிகள் யாழ்ப்பாணம் வருகை தந்தபோது நல்லை ஆதினத்திற்கு வருகைதந்து விரைவாக நாங்கள் இந்த மண்ணிலே ஒரு அமைதியை உருவாக்குவோம். தமிழர்களுக்குரிய பிரச்சினைகளை தீர்ப்போம் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் இன்னும் எங்களுடைய பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
எங்களுக்குள்ளே சண்டை வோண்டாம் நாங்கள் ஒற்றுமையாக வாழ்வோம். எங்களையும் உங்களையும் பேதப்படுத்த வேண்டாம். எல்லோரும் இறைவனின் பிள்ளைகள் என்று கருதுங்கள்.
எல்லா பல்கலைக்கழகத்திலும் எல்லோரும் படிக்கவேண்டும் எல்லோரும் ஒற்றுமைக்காக வாழ்வதற்காக எல்லாக் கதவுகளையும் திறந்து விடுங்கள்.
இன்றைய கூட்டத்தோடு இந்த சிந்தனை முடிவடையக் கூடாது.
பௌத்த பெரியோர்கள் இந்த நாட்டினுடைய தலைவர்களை சந்தித்து விரைவாக எங்களுக்கு ஒரு நிரந்தர சமாதானத்தை அமைதியை மற்றும் தர்மத்தை உருவாக்க வேண்டும்.
Post a Comment