கண்கள் ஊடாக உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் - மருத்துவர்கள் எச்சரிக்கை - Yarl Voice கண்கள் ஊடாக உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் - மருத்துவர்கள் எச்சரிக்கை - Yarl Voice

கண்கள் ஊடாக உடலுக்குள் செல்லும் கொரோனா வைரஸ் - மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் கண்கள் ஊடாகத் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் 23 நாடுகளில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு பல முன்னெச்சரிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையிலேயே கொரோ வைரஸ் தொற்று தொடர்பாக கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது 'கொரோனா வைரஸ் தொற்றிய  ஒருவர் தும்மினால் இருமினால் அல்லது எச்சில் துப்பினால் ஆரோக்கியமாக இருக்கும் நபரொருவரின்  கண் ஊடாக உடலுக்குள் செல்லும் ஆபத்து  காணப்படுகின்றது.

இதனால் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முககவசம் பயன்படுத்துவதும் பயனற்ற ஒன்றாக மாறி வருகின்றது.

இதனால் மக்கள் அனைவரும் தங்களது ஆரோக்கியம் தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post