அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் உருவாகியுள்ள நிலையில் நாம் ஆபத்தான காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஐ.நா.தெரிவித்துள்ளது.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான் ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது
இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் ஐ. நா. பொதுச் செயலாளர் குத்தரெஸ் இந்த நூற்றாண்டில் அரசியல் பதற்றம் உச்சத்தை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குத்தரெஸ் கூறும்போதுஇ ' புதிய ஆண்டு கொந்தளிப்புடன் தொடங்கியுள்ளது. நாம் ஆபத்தான காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புவி அரசியல் சார்ந்த பதற்றங்கள் இந்த நூற்றாண்டில் உச்சத்தில் உள்ளது. இந்த கொந்தளிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
Post a Comment