வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸார் இடமாற்றம் பழிவாங்கல் என சுட்டிக்காட்டு - ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய 300 தமிழ்ப் பொலிசாரையும் ஒரே நாளில் இடமாற்றம் செய்தமை ஓர் பரிவாங்கல் நடவடிக்கை எனப் பொலிசார் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு ஓர் அமைச்சரின் உதவியினை நாடியுள்ளனர்.
வடக்கின் யாழ்ப்பாணம் இ காங்கேசன்துறை கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு மற்றும் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் தற்போது 300 தமிழ்ப் பொலிசார் பணியாற்றுகின்றனர்.
இதில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை அத்தியட்சகரின் கீழ் 150 தமிழ்ப் பொலிசாரும் ஏனைய 4 பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளின் கீழ் 150 தமிழ்ப் பொலிசாரும் பணியாற்றிய நிலையில் யாழில் படியாற்றிய பொலிசார் வெளி மாவட்டங்களிற்கும் வெளி மாவட்டத்தில் பணியாற்றியவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இவற்றின் அடிப்படையிலேயே தாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பல பொலிசார் கருதுகின்றனர். இதனாலேயே குறித்த விடயம் தொடர்பில. அமைச்சரின் உதவி நாடப்பட்டதாக தமிழ்ப் பொலிசார் தெரிவித்தனர்.
Post a Comment