மக்களிடத்தில் முக்கியமான கருத்தை அல்லது கொள்கையை கொண்டு சேர்ப்பதால் நானுமொரு தீவிரவாதிதான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் சீமான் மேலும் கூறியுள்ளதாவது
'ரஜினியை வைத்து மத்திய அரசு நாடகம் போடுகிறது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டத்துக்கு மக்கள் கருத்து தேவையில்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால்இ மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்திட்டவர் அவர்தான். காங்கிரஸ் ஆட்சியின் போது குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்பட்ட போது தி.மு.க.ஆதரவு தெரிவித்தது.
பா.ஜ.க.வுக்கு எதிரானது தி.மு.க.என இன்னும் மக்கள் நம்பி கொண்டுள்ளனர். மேலும் பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் நாங்கள் எங்கள் கருத்தை கொள்கையை தீவிரமாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கிறோம். இதனால் நானுமொரு தீவிரவாதிதான்' என குறிப்பிட்டுள்ளார்.
நானும் ஒரு தீவிரவாதிதான் - சீமான்
Published byYarl Voice Editor
-
0
Tags
India
Published by:-Yarl Voice Editor
Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil.
Post a Comment